அன்பே கொஞ்சம் காதல் கொடு 16-20

அத்தியாயம்-16
நிலா ரொம்ப அமைதியா இருந்தாள். எதுவுமே பேசவில்லை...நேற்று லேப்பில் நடந்ததை நினைத்து
தனது கையைத்தான் பார்த்திருந்தாள், இதை எந்த வகையில் சேர்க்க, பாசமா, அக்கறையா, காதலா, என சிந்தித்தவள், ஒரு முடிவுக்கு வந்தாள்.
இரண்டு நாள் அமைதியாக கழிந்தது ,கதிருக்கு இப்போ தலைவேதனை, சும்மா இருந்தவன சீண்டிவிட்டுட்டா...
எதுவுமே வேண்டாமென்றுதான் ஒதுங்கியிருந்ததே. நிலாவின் மேல் இருக்கும் ஆசையையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவனை இப்போது வந்து அவள் அவனிடம் நெருங்கவும், அவனால் முடியவில்லை...
அன்று லேபில் நடந்ததுக்கூட அவனையறியாமலயே அவளுக்கு ஏதோ என்ற பதட்டத்தில்தான் அவனது உணர்வு வெளியே வந்தது...
கொஞ்சநாள் நிலா கதிரிடமிருந்து ஒதுங்கியிருந்தாள்...
தான் உண்டு தன்வேலையுண்டு என்றிருக்க... அதுக்கும் அவனுக்கு கோபம் வந்தது. அதையும் அவளிடமே காண்பித்தான்...வகுப்பில் அவளை எழுப்பிவிட்டு நடத்தாதப் பாடத்திலிருந்து கேள்விக்கேட்டு அன்று அவளை வறுத்தெடுத்தான்...அவளுக்கோ இது என்னடா புதுசோதனை என நொந்துக்கொண்டாள்...
திடீரென்று மூன்று நாள் கதிர் கல்லூரிக்கு வரவில்லை யாருகிட்டவும் கேட்க மனதில்லாமல் இருக்க, மணியரசு போன் செய்தார்.
"சொல்லுங்க மாமா, எப்படி இருக்கீங்க, அத்தையெப்படி இருக்காங்க என்று கேட்டுவிட்டு, கதிர்மாமா வீட்ல எப்படி இருக்காங்க" என்றுகேட்டாள்.
நிலாம்மா கதிர்வீட்ல எல்லாரும் அங்கதான் இருக்காங்க, புதுவீட்டுக்கு பூஜை செய்திட்டு குடியேறப்போறாங்க, அதுக்காக வந்திருக்காங்க, நான் நாளைக்கு அங்க வருவேன்... உங்கம்மாகிட்ட பேசவேண்டியதிருக்கு என அவளிடம் பேசியிருந்தார்...
பதினேழு வயசுல இருந்த தைரியம் இப்போயில்லை, பயமகாயிருந்தது. மாம்ஸ் இப்படியே பிடிவாதமாயிருந்தா எப்படி,வேற யாருக்கூடவும் வாழறது கனவுலக்கூட அவள் நினைத்ததில்லை...
இப்படி தன் நினைவுகளில் இருந்தவளை கலைத்தது இனியாதான்...
என்ன உங்க மாம்ஸ்ஸ நினைச்சுக் கனவா...டூயட்ல இடையில் வந்திட்டனோ என்றுக் கேட்டாள்...
டூயட்ல இல்லடி மெயின் மேட்டர்லக் கரடியா வந்திட்ட... என்றதும்.
இனியா "அடிப்பாவி அவ்வளவு தூரமாவ கனவுல, முடியலடி"
நிலா சிரித்தவிட்டாள் ஹிட்லரக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, தொடறதுக்கே நாள் பார்க்கனும் இதுல டூயட்டாம் ... போடி...
அதுக்காக இல்லை அந்த வயசுல கதிர் மாமாவைக் கல்யாணம் பண்ணப்போறேன்னு சொல்லும்போது சின்னபிள்ளை பின்னாடி புரிஞ்சிப்பானு விட்டுட்டாங்க...
இது என்ன நினைச்சா மாத்துறதுக்கு கடையில் வாங்குற பொருளா...மாமாவுக்கு என்னை புரியும்...ஆனா அப்பா ..அவரு என்றைக்கு மற்றவங்களப் பற்றி யோசிச்சிருக்காங்க...பணமிருந்தா போதும் விடு... அம்மாவையே இன்னும் மாமா வீட்டுக்கு போறதுக்கே திட்டுவாங்க...இவங்க எல்லாரும் ஒரு பக்கம்னா இந்த மாம்ஸ் என்னைக் கல்யாணம் பண்ணிப்பாரா... அத யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிக்குது.
இனியாவிற்கு கஷ்டமாயிருந்தது, எப்பவும் கலகலன்னு இருக்கும் நிலாவிற்குள்ளே இவ்வளவு வேதனையா என்று, அவளை ஆறுதல் படுத்தினாள்.
அடுத்தநாள் கல்லூரிக்கு வந்த கதிரினைப் பார்த்தவள் நேரடியாக அவனிடம் சென்று
"வீடு கிரஹப்பிரவேசத்துக்கு ஏன் என்கிட்ட சொல்லலை" கேட்டாள்.
கதிர் இப்போ கொஞ்சம் திமிராகவே கேட்டான் "உனக்கெதுக்கு சொல்லனும், யார் நீ"
நிலாவிற்கு கண்ணீர் பொங்கியது "என்கிட்டச் சொல்லனும், ஏன்னா அந்த வீட்ல வாழப்போறது நான், அப்போ கண்டிப்பா எனக்கு சொல்லிருக்கனும்"எனத் தன்னுடைய் மனதினை வெளிப்டுத்தியிருந்தாள்.
“ஹான்..நீ அங்க வாழப்போறியா அது நானும், என் குடும்பமும்தான் வாழப்போறோம், அதுல தென்னவன் வீட்டுப்பிள்ளைங்க எங்க வந்தாங்க வாழறதுக்கு"
நிலாவிற்கு இப்போ கோவம் கண்ணீரும் வர துடைத்துக்கொண்டே"நான்தான் உங்ககூட அந்த வீட்ல வாழ்வேன், வேற எதாவது செஞ்சீங்க, அப்புறமிருக்கு" என அவளுக்குப் பேச வார்த்தை வரவில்லை.
நிதானமாக அவளைப் பார்த்தவன் "எனக்கு வேறப் பொண்ணுப் பார்த்தாச்சு அவளைத்தான் கலயாணம் பண்ணிக்கப்போறேன், இப்போ என்ன பண்ணுவ"
நிலா "ஒன்னும் பண்ணமாட்டேன் உங்களுக்கு அவளுக்கும் இடையில வந்து படுத்துப்பேன்... வேற ஒன்னும் செய்யமாட்டேன்” என்று சொல்லிவிட்டு வகுப்பினுள்ளே வந்தவள் குனிந்து பெஞ்சில் படுத்திருந்தாள்.அவள் தலையசையவும்தான் தெரியும் அவள் அழுகின்றாள் என்று...
என்ன செய்முடியும் இதுதான் வேண்டுமென்று கேட்டாள் சில பல வலிகளைத்தாங்கித்தானாக வேண்டும்.
கதிரும் தன் இருக்கையில் இருந்தவன், நிலாவைப் பற்றித்தான் சிந்தித்தான். வீட்லயும் பெரியவங்க அவனிடம் பேசியிருந்தனர்...
அவன் முடியாது நான் கல்யாணமே பண்ணிக்கப்போறதில்லை...அவளுக்கு வேற பார்க்க சொல்லிருங்க பெரியப்பாகிட்ட ...இது நடக்காது என்று முடிவாகச் சொல்லிவிட்டுத்தான் வந்தான்...
இங்க வந்தா இவா இப்படிப்பேசறா...
இடையில் வந்துப்படுத்துப்பாளம்...
வாயப்பாரு என்று நினைத்தான்.
மாலைக் கல்லூரி விட்டதும் தன் வண்டியின் அருகே நின்றிருந்தவள், கதிருக்காக காத்திருந்தாள்...
தன் வண்டியை எடுக்க வந்தவன் அவளைப்பார்த்தும் கண்டுக்காதமாதிரி தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்...
வீட்டிற்குள் நுழைய அங்கு ஒரு பெண்கள் ஓட்டும் வண்டி நிற்க யோசனையோடு உள்ளேப்போனான் இது அந்த ஆட்டுவாலு வண்டிமாதிரி இருக்கே என்று, அங்கே அமர்ந்திருந்தவளைப்பார்த்து அப்படியே நின்றுவிட்டான்..
ஹாய் மாம்ஸ் என்ன லேட்டு..சிக்னல்ல மாட்டிகிட்டீங்களா? ஆனா நான் வந்து பத்துநிமிஷமாச்சுது, இவ்வளவு மெதுவாவா வண்டி ஓட்டுவீங்க, என்ற வாரே வேதநாயகத்தின் அருகில் அமர்ந்தவள் அவரிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு கிளம்பவும் அருகில் வந்தவன் வாயைத்திறக்கப்போக அதுக்குள்ளாக
" உபயம் மணியரசு, அவர்தான் அட்ரஸ் சொன்னது, உங்களைப் பார்க்கவரலை, மாமாவைப் பார்க்கவந்தேன் கிட்டதட்ட ஆறுமாசமாச்சுது மாமாவைப் பார்த்து அதுதான் வந்தேன்"
ஆறுமாசமாச்சுதா என்று புருவம் சுருங்க கேட்கவும் நாக்கை கடித்தவள் ஒன்றும் சொல்லாமல் நிற்க...
மதுரையில் படிக்கும் போது எங்கவீட்டிற்குப் போயிருக்கியா என்று கேட்டான்.
இதுக்குமேல பொய் சொல்லமுடியாமல்
"ஆமா "
ஓஓஓ...ஏன் வெட்டிவிட்டது ஒட்டப்பார்த்தியாக்கும்...முறிஞ்ச உறவு முறிஞ்சதுதான் போ... இனி இங்க வந்த வெளிய தள்ளிவிட்ருவேன் பார்த்துக்கோ...போ என்றான்...
நிலாவின் முகம்வாடியதைப் பார்த்தவனுக்கு கஷ்டமாக இருந்தது..
இருந்தாலும் இதுதான் சரி,இந்த உறவுத் தொடரக்கூடாது.தொடர்ந்தால் அவளுக்கும் சரி எனக்கும் சரி எதிர்காலம் நல்லாயிருக்காது என்றுதான் அவளிடம் அப்படி பேசினான்.
வண்டியை எப்படி ஓட்டிவந்தாள் என்றுத் தெரியாது, வீட்டிற்கு வந்தவள் தனதறைக்குள் சென்று முடங்கினாள்.
சாப்பிடவுமில்லை ஜோதி அவளதறைக்கு வந்து எழுப்பி சாப்பாடுகுடுக்க வேண்டாமென்று படுத்துக்கொண்டாள்...
அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்தவனுக்கு கண்கள் தன்னையறியாமலயே நிலாவினைத்தேட அவளில்லை என்றதும், ஏமாற்றமாக உணர்ந்தான்.
ஒருவாரம் கழித்துதான் வந்தாள், வந்தவள் துறைத்தலைவரிடம் சென்று அவளின் விடுமுறைக்கான காரணத்தை சொன்னாள் வைரஸ் காய்ச்சல் அதனாலத்தான் வரமுடியவில்லை என்று.
கதிரும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
அவனுக்குப் புரிந்தது அவனது மனது அவளை அதிகமாக தேடுது என்று உணர்வுகளைக் காண்பித்தால் அது கதிரியில்லையே, முகத்தில் எந்தவிதாமான உணர்வுகளையும் காட்டிக்கொள்ளவில்லை...
மணியரசு மூன்றுமாதம் கழித்து தென்னவன் வீட்டிற்கு வந்தவர் எல்லாரும் இருக்கும்போது நிலாவின் விசயமாக பேசினார் உங்க முடிவுத் தெரிஞ்சுட்டுனா கதிரை சம்மதிக்க வைக்கவேண்டியது என்னோட பொறுப்பு, எப்படி வழிக்கு கொண்டுவரணும்னு எனக்குத்தெரியும் என்றார்...
"அது எப்படி சரியா வரும், ஏற்கனவே எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்கு, அவாதான் சின்னபிள்ளை நம்மதான் சொல்லிப் புரியவைக்கனும்"எனத் தென்னவன் சொல்லவும்.
நிலா சொல்லிவிட்டாள் நான் கதிர் மாமவைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.
ஜோதி நிலா நீ சின்னபிள்ளை புரியாமப் பேசாத பின்னாடி பிரச்சனையாகும்..ஏற்கனவே நித்யா செய்தது சின்னவிசயமில்லை எல்லாத்தையும மறந்து மறுபடியும் நம்ம வீட்லப் பொண்ணெடுக்க, இது வாழ்க்கைம்மா, எடுத்தோம் கவத்தோம்னு செய்யமுடியாது"
“அதைதான் நானும் சொல்றேன்மா இது என்னோட வாழ்க்கை கதிர் மாமாகூடதான் வாழனும்...வேற எதுக்கும் நான் சம்மதிக்கமாட்டேன்...மனசு மாத்திரலாம்னு நினைக்காதிங்க என்க...”
எல்லோரும் இப்போ என்ன செய்றது என்று அமைதியாக இருந்தனர் "கதிர் மாப்பிள்ளைத் தங்கம் குணத்தில்,எனக்கு அது பிரச்சனையில்லை சம்மதம்தான் ஆனா பழையவிசயங்கள் வைத்து நிலாவிற்கு எதுவும் வரக்கூடாது, அதுதான் யோசிக்கிறேன்” என்றார் தென்னவன்...
இதுவே மணியரசுக்கு போதுமானதாக இருக்க, அவர் நேரிடையாகவே வேதநாயகத்திடம் விசயத்தை போட்டுடைத்துவிட்டார், அவருக்கு ரொம்ப சந்தோசம் நிலாவே தனது மருமகளாக வருவது...
சென்னைக்கு வந்தவர் மகனை அழைத்து பேசினார், அவனுக்கு என்ன பதில் சொல்லனுத் தெரியவில்லை, சிறிது யோசித்தவன் ஒருமனம் அவளோடு வாழ சம்மதிக்க, இன்னொரு மனமோ அதன் சாதகபாதகங்களை யோசித்து வேண்டாமென சொல்ல, தந்தையிட்ம் வேண்டாம்பா இது சரிவராது , அவ சின்னபிள்ளை, அந்தவீட்ல உள்ளவள் வேண்டாம் என்றான்...
அடுத்த நாள் காலை தந்தையைப் பார்க்க வந்தவன், கண்டது தந்தை தளர்ந்துப் படுத்திருப்பதை என்னவென்றுத் தாயிடம் கேட்க "அப்பா நேத்து இராத்திரியிலிருந்து சாப்பிடாம பிடிவாதம்பிடிக்காங்க" என்கவும்,
அவரின் கையைப்பிடித்து நான் சாயங்காலமா வந்து நல்ல பதில் சொல்றேன்பா இப்போ சாப்பிடுங்க என்றதும் சரி என்றார்...
அவன் நிலாவிடம் பேசி இது சரிவராது,அப்பாவிடம் நிலாவை வைத்தே இந்த திருமன பேச்சை நிறத்தனும் என்று முடிவோட சென்றான்.
கல்லூரிக்குள் வந்தவன் நிலாவைத் தேடி வகுப்பிற்கே சென்று அழைத்தவன் மதியத்திற்குமேல் தயாராகயிரு, எனக்கு உன்கிட்டப்பேசனும் என்றான்...
நிலாவிற்கோ என்ன பேசப்போறாங்களோ என்று பயத்தில் தொண்டைக்குழி ஏறியிறங்கியது...
மதியம் அவனதுக் காரில் அழைத்து சென்றவன் ஒரு ரெஷ்டரன்டிற்கு அழைத்து சென்றவன் எடுத்தவுடனே "நம்ம இரண்டுபேருக்கும் வயசு வித்தியாசம் எவ்வளவுத் தெரியுமா கிட்டதட்ட பத்து வயசுக்குமேல, அப்புறம் மறுபடியும் உங்கவீட்ல பொண்ணெடுப்பேனு எப்படி நம்புறீங்க, உன்னை எனக்குப் பிடிக்கும் அவ்வளவுதான், எனக்கு கல்யாணங்கறதுலயே விருப்பமில்லை"என காட்டமாக பேசவும்.
நிலா"எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தாங்க மாம்ஸ்"
"என்ன" என்று அதிர்ச்சியானான்."இங்க என்னப் பேசிட்டிருக்கேன், நீ என்னக் கேட்குற நீ "
உங்ககூட முதல்தடவையா வெளியே வந்திருக்கேன், அதவுமில்லாமல் உங்க வாய்தானப் பேசிட்டிருக்கு, என் வாய் சும்மாதான இருக்கு, எனக்கு வாங்கித்தாங்க நான் சாப்பிடுறேன், நீங்க பேசுங்க என்றாள்.
கதிருக்கு லேசாக புன்னகை எட்டிப்பார்க்க அதை மறைத்தவன் அவளுக்கு ஐஸ்க்ரீம் சொல்லிவிட்டு அவளிடம் கேட்டான் "உன் முடிவு என்ன"
"இருங்க மாம்ஸ் சாப்பிட்டுட்டு சொல்றேன்"
சாப்பிட்டு முடித்தவள், உங்களுக்கு வேறமாதிரி பிரச்னையிருக்கா என்றதும்....
கதிரின் கண்கள் கோபமாகப் பார்க்க "நான் சின்ன பிள்ளையாயிருந்த என்ன உங்களுக்கு புடிக்கும்னா அதைப்பற்றி ஏன் யோசிக்கறீங்க, எனக்கு இந்த மீசைக்கார மாமாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை, நீங்க சம்மதம் சொல்லிடுங்க” என்றாளே பாரக்கலாம்...
"நாம பேசனும்னு கூட்டிட்டு வந்தா இவ பேசி முடிச்சிட்டா, எப்பவும் நம்மளை வச்சி செய்றதுல சரியா இருக்கா” என்று பணம் கொடுத்தவிட்டு வெளியவந்தனர்.
என்னை மறுபடியும் காலேஜ்ல விட்ருங்க , என் வண்டி அங்கதான் நிற்கு...என்றாள்...
ஆட்டு வாலு நம்மளை ஆட்டிவைக்குது என்று மனதிற்குள் திட்டிக்கொண்டான்...
மாலையில் வீடு வந்ததும் தன் தந்தையிடம் சென்றவன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னான், பின் இப்போ கல்யாணம் வேண்டாம், அவளோட படிப்பு முடியட்டும் என்றுவிட்டான்.
கல்லூரியில் எப்பவும் போல அதே கலாட்டாதான். பரீட்சை முடிந்து இரண்டு நாளில் ...
இந்த இரண்டு முன்று வருடத்திற்குள்ளாகவே, நித்யா மெல்ல மெல்ல தனது தாயிடம் பேச ஆரம்பித்திருந்தாள், குடும்பத்தில் பிரச்சனை வருது என்றும் பிள்ளையைப் பார்க்க ஆளில்லை ஆனாலும் வேலைக்குப்போகச சொல்றாங்க என்று ஆயிரத்தெட்டு குறையை சொன்னாள்...
வீட்டிற்குத் தெரியாமலயே நிலாவின் வண்டியில் இருவரும் அவளைக்காணச் சென்றனர்...
அப்போதுதான் அவளது புகுந்தவீட்டின் இலட்சனமே தெரியும் ஜோதிக்கு...
தாயாக வருத்தப்பட்டர். நிலா அங்கயே வெளியே நின்றுவிடுவாள். பணத்திற்காக ஆசைப்பட்டு பெரிய வீட்டுப்பொண்ணு என்றுதான் திருமணமாகியிருந்தாலும் கூட்டிக்கிட்டுப்போனது.
தென்னவன் அவ்வளவு நகையையும் வாங்கிக்கொண்டார் என்றதும் நித்யாவின் மாமியாருக்கு ஆத்திரம், எப்பவும் நித்யாவின்மேல் புகார்தான் வாசிப்பார் மகனிடம்...
பிள்ளை கிரஸ்ல விட்டுட்டு வேலைக்கு போகச் சொன்னான் அவளது கணவன். அதுவே அவளுக்கு மனதுவிட்டுப்போனது, இப்படிப் பட்டவனுக்காகவா ஓடிவந்தோம் என்று நினைக்க ஆரம்பித்தாள்.
கதிரின் சென்னைவாசம், அவனது வேலை சமபளம் எல்லாம் கேட்டதும், தப்பு பண்ணிட்டமோ நல்ல வாழ்க்கையை விட்டுட்டமே என்று ஏங்கியவள், நிலா கதிரை கல்யாணம் பண்ணப்போறா என்றதும் பொறாமைத்தீ மெதுவாக அவளுக்குள் எட்டிப்பார்த்தது, ஜோதியிடம் "அந்தக் காட்டானுக்கு நிலாவக் கட்டிக் குடுக்காதிங்க, அன்னைக்கு என்னையவே அடிச்சான்,எப்படிப் பேசினான், நிலாவோட குணத்துக்கு பாவம் நிலா" என்றாள்.
அவளது பேச்சை ஜோதி காதிலயே வாங்கிக்கொள்ளவில்லை அதுவேற அவளுக்கு கடுப்பு, அது நிலாவின் மீது திரும்பியது...
வேதநாயகத்தின் உடல்நிலைக் கொஞ்சம் மோசமாக அவசர அவசரமாக இருவீட்டாரின் சொந்தங்களுடன், கோவிலில் திருமணத்தை முடித்து, அடுத்து பதிவுத்திருமணம் செய்திருந்தனர்...
அவசரத்திருமணத்தில் எந்த முடிவுமே கதிரிடம் கேட்கப்படவேயில்லை, வேதநாயகத்தின் அறிவுரைப்படி எல்லாவற்றையும் மணியரசு செய்திருந்தார்...
அதைவிட தென்னவன் சித்தார்த்தை பார்த்ததும் கோபம் வந்தது அவனுக்கு அதனால்தான் நிலாவிடம் இரவில் கோபத்தை காண்பித்தான்.
இப்படியாக சிலபல தடைகள் கடந்து திருமணம் நடந்திருந்தது....
அத்தியாயம்-17
மதுரையிலிருந்து காரிலயே சென்னை வரவும், இடையில் காரை நிறுத்தச் சொல்லி வெளிக்காற்று வாங்கினாள், பசிக்குது வாந்தியும் வந்தது, என்னமோ செய்தது, வீட்டில் யாரிடமும் சொல்லவும் பிடிக்கவில்லை.
ஜோதிதான் கார்ல வந்தது பிடிக்கவில்லைப்போல என்று நினைத்து, அவளுக்கு வழியில் எலுமிச்சை வாங்கிக்கொடுக்க அது கொஞ்சம் பரவாயில்லாமல் தோன்றியது, அப்படியே வீடு வந்து சேர்ந்தனர்...
இதில் தென்னவனுக்கோ மனது ரணமாக வலித்தது, ஒரு மகளின் நிமித்தம் நாம் செய்த செயலின் பலன், இப்போ வீட்டின் செல்ல மகள் அனுபவிக்கிறாளே!
அவளோட வாழ்க்கை என்னாகுமோ என்ற கவலைதான். சாப்பிட எதாவது இருக்குதா என்று பார்க்க ஒன்றுமில்லை. வருவாங்களே எதாவது செய்து வைக்கனும்னு அறிவேயில்லை என்று மூத்தமகளைத் திட்டிக்கொண்டிருந்தார் அதே நேரத்தில்...
நித்யா அவளது அறையிலிருந்து வெளியே வந்தவள் எல்லோரையும் பார்த்து, என்னம்மா வந்துட்டீங்க, அங்க எல்லாம் முடிஞ்சுதா என்று கேட்டவள் அப்போதுதான் நிலா சோபாவில் படுத்திருந்ததைப் பார்த்து ...
என்னம்மா தங்கச்சியக் கூட்டிட்டு வந்துட்டீங்க...என்று கேட்க...
தென்னவன் ஜோதியிடம் அவளை வாய மூடிட்டு போகச்சொல்லு, இல்லைனா அந்த பேயை நடுராத்திரினுக்கூட பார்க்கமாட்டேன், இப்பவே தெருவுல இறக்கிவிட்ருவேன்..
என் மனைவி அழுதாளேனுதான் இந்த தரங்கெட்டவளை வீட்டிற்குள்ள விட்ருக்கேன்...அவ செய்த பாவம்தான் ஒரு குடும்பத்தையே அழிச்சிட்டு, இப்போ என் மகள் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்திட்டிருக்கு. என் கண்ணு முன்னாடி அவளை வரச்சொல்லாத ஜோதி... கோபத்தில் அவளை அடிக்ககூடச் செய்வார் என்ற நிலையிலிருந்தார்...
அவர் பேசியதைக் கேட்டு நித்யாவிற்கு அப்படி எரிஞ்சது, அவதான் செல்லமா? நான் இல்லையா? என்று நிலாவைப் பார்க்க அவபடுத்திருந்ததே சொன்னது ஏதோ பிரச்சனையென்று.
ஒன்றை மறந்துவிட்டாள் அவளும் அந்த வீட்டில் செல்லப் பெண்ணாக இருந்து அவளின் செய்கையால் இப்போ இப்படியிருக்கா என்று ...
ஜோதி உன் வேலையென்னவோ அதப்பாரு, போ ...
மனதில் வஞ்சத்தோடு போய்விட்டாள். அவளது கணவன் இவளை வேண்டாமென்று விட்டுவிட்டான். இப்பவும் பணம் நகை தென்னவன் கொடுத்தாலா வாங்கிட்டு நித்யாவை அழைச்சிட்டுப்போவான். அவனது குணம் தெரிஞ்சுத்தான் நித்யா இனி அங்கப்போகமாட்டேன் விவாகரத்து பண்ணப் போறேனு சொல்லிவிட்டாள்...
அதற்கான வேலையிலும் இறங்கிவிட்டாள்...
தந்தை வீடே சொர்க்கம் பணம், வசதியெல்லாம் போதும் என திட்டமிட்டே இங்கு இருக்கின்றாள். இப்போது நிலா வரவும் வேறு யோசனை செய்தாள்.
ஜோதி நிலாவினை எழுப்பியவர் சிறிது பால் எடுத்துவந்து குடிக்கசொல்ல
"வேண்டாம்மா வண்டியில் வந்தது ஒரு மாதிரி இருக்கு" என்றதும் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார்,அவளது அறைக்குள் வரவும் அவ்வளவையும் வாந்திப் பண்ணிருந்தாள்.
காலையில் எழுந்ததும் மாடியில் அவளுக்கென்று போட்ட ஊஞ்சலை எடுத்து தரச்சொல்லி அண்ணனிடம் சொல்லவும், அவன் அதை எடுத்துப் போட்டுவிட்டு, தங்கையைப் பார்க்க அவளது கண்களில் ஒளியில்லை எதையோ இழந்தது போன்ற தோற்றம்...
எப்பவும் நிலா இப்படியிருந்ததில்லை, வீட்டில் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் எல்லோரையும் சரியாக்கிவிடுவாள்...
சித்தார்த் வேலைக்காக வெளிநாடு சென்று வந்ததுக்குப் பிறகு கொஞ்சம் நிதானம்,பொருமை வந்திருந்தது.
தங்கையின் கன்னத்தை தட்டியவன் அப்படியே கீழிறங்கி வந்துவிட்டான். கீழ வந்ததும் அவனுக்கு ஆற்றாமையில் ஜோதியிடம் வந்து பேசினான்...எதாவது செய்ங்கமா.நிலாவைப் பார்க்க பாவமா இருக்கும்மா ....
நிலாவின் இருப்பிடம் அந்த ஊஞ்சலென்றானது, இல்லையென்றால் பின்பக்கம் இருக்கும் மாமரத்தின் திண்டில் அமர்ந்திருப்பாள்..
தென்னவனுக்கு மணியரசு மூலமாக கதிர் சென்னை வந்ததும், அவனுடன் சித்ராவை அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றான் என்றத் தகவலும் வந்திருந்தது.
அடுத்தநாள் தென்னவன் கதிரின் வீட்டிற்கு வந்திருந்தார். சித்ரா அவரைப் பார்த்ததும் உள்ளே அழைத்து உட்காரவைத்தவர்,
கதிரை அழைத்ததும் கீழிறங்கி வந்தவன்.
மாமானாரைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி. அவர் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை, நிலா அதிரடியா வந்தாலும் வருவாள் என்று நினைத்திருந்தான், அதனால் அமைதியாக வந்து உட்கார்ந்தவன் ஒன்றுமே சொல்லாமல் இருந்தான், அவனக்கேத் தெரியும் நிலா விசயமாகப் பேசவந்திருப்பாரென்று.
தென்னவன் பேசினார் "ஒரு தகப்பன் தன் பிள்ளையைக் காணவில்லைனா எப்படித் துடிச்சிருப்போம் அந்த நேரத்துல எங்களுக்கு உங்களத்தான் விசாரிக்கத் தோணுச்சு ஏன்னா உங்க கூடயிருந்தப் பெண்ணைக் கணவில்லைனா உங்களத்தாங்க விசாரிக்கணும்,அதைத்தான் செய்தோம்,ஆனாலும் உங்க குணத்திற்கு நாங்க அப்படி செய்தது தப்புத்தான்.
என் பொண்ணு நிலா, அவள் அவாளாகவேயில்லை எல்லாத்தையும் பறிகொடுத்தவ மாதிரி இருக்கா, நாங்கதாங்க தப்பு பண்ணினோம் அவ சின்னபிள்ளை, தயவு செய்து அவளைத் தண்டிக்காதிங்க, உங்ககிட்ட நடந்ததப்பிற்கு
மன்னிப்புக் கேட்டுக்குறேன் என்று கையெடுத்து கும்பிடவும்" .
கதிர் இதை எதிர்ப்பார்க்கவில்லை "ஓஓ..என்னைய நீங்க போலிஸ் ஸ்டேசன்ல விசாரிக்க அனுப்பினதை நான் தப்பே சொல்லவில்லையே, என்ன எதுக்கு நீங்க அடிச்சி இழுத்திட்டுப் போனீங்க, பணமிருக்கு இவன் நமக்கு கீழ் அப்படிங்கற திமிர் அதெல்லாம் விடுங்க, என்ன காரணத்துக்காக எங்கப்பாவையும், அம்மாவையும் மதுரை போலிஸ் ஸ்டேசனில் அழைச்சு விசாரீச்சீங்க, அவ்வளவு கேவலமா தெரிஞ்சமா உங்களுக்கு, நீங்க அப்படி செய்ததின் பலன்தான் எங்கப்பா நோயில் விழுந்து , இப்படி இறந்துப்போயிட்டாங்க...
சரிங்க உங்க கருத்துக்கே வர்றேன்,நீங்க பெரிய மனுஷன், நல்ல பணபலம் ஆள்பலம் உள்ளவங்க, உங்களை நான் மன்னிச்சிட்டேன், இப்போ எங்கப்பாவை எனக்கு உயிரோடக் குடுங்க” என்றான்.
அவரால் எந்தப்பதிலும் சொல்லயிலவில்லை அமைதியாக இருந்தவர் மெதுவாக எழும்பி அவனைப்பார்த்து "நிலா உங்களுக்கு என்ன தீங்கு செய்தானு அவளை இப்படி கஷ்டப்படுத்தறீங்க, நீங்கதான் எல்லாம்னு எங்ககிட்ட போராடி கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுக்கு தண்டனை குடுக்கறீங்களா" என்றார்.
நீங்க இப்போ போகலாம் என் மனைவியை என்ன செய்யனும்னு எனக்குத் தெரியும்...
என்றவன் படியேறி தனதறைக்குள் சென்றுவிட்டான்.
அந்த இடத்தில் தென்னவன் பெரிதாக அடிவாங்கினார். பணம் இருந்தும் இரண்டு பெண்களோட வாழ்க்கை இப்படியாகிட்டதே என மனம் நொந்துப் போனார்.
கதிருக்கோ தென்னவன் வந்துப்போனபின் அவர் நிலாவைப் பற்றி சொன்னதும், அவளை இப்பவே பார்க்கனும் போலத் தோணவும்,அங்கயும் இங்கயும் நடந்து தன்னை சமன்படுத்த முயல...முடியாமல் திணறினான்.
இங்கே நிலாவோ கல்லூரிக்கு கிளம்பினாள். இரண்டு வாரமும் வீட்டிற்குள்ளே இருந்தது பைத்தியம் பிடிக்கின்ற நிலையில் இருக்கவும் தயாராக வந்தவள் சாப்பிட அமர்ந்தாள்.
நித்யா அவளைப் பார்த்து “எதுக்கு இப்போ கிளம்புற, அங்கப்போனா அந்தக்காட்டான் உன்னைப் பார்த்தால் மறுபடியும் எதாவது சொல்லுவான்...”என்றதும் நிலாவிற்கு வந்த கோபத்தில் தட்டை விட்டெறிந்துவிட்டாள்...
ஜோதி உனக்கு என்ன வேலை திங்கறதும், தூங்கறதும்தான அத ஒழுங்காப்பாரு போ...இங்க வந்து அதிகாரம் செய்ய உனக்கு எதுவுமில்லை... போ என்றார்.
ஒவ்வொரு இடத்துலயும் அவள் அவமானப்படுவதை தாங்கமுடியாமல் கோபத்தில் சென்றுவிட்டாள்.
நிலா அமைதியாக கொஞ்சமாக முடிந்தளவு சாப்பிட்டாள், அதற்குள் சித்தார்த் வந்து நிலா உன்னை நான் கொண்டுவிடுறேன் நீ வண்டியிலப் போகவேண்டாம் என்றதும், நிலா "அண்ணா கார் எடுத்துட்டு வர்றியா கார்லயேப் போகலம்" என்றதும்
சரிமா என்று காரை எடுத்து வந்தான்.
கல்லூரிக்குள் நுழைந்ததும், நிலா இறங்கி மெதுவாக செல்ல, சித்தார்த் நிலாவைப் பார்த்து வேதனைப்பட்டான்.
வீட்ல நிலாயிருந்தா எப்பவும் அந்தயிடமே அழகா உயிரோட்டமாக இருக்கும், அவளோட இன்றைய நிலமையப் பார்த்தவனுக்கு சத்தியமா அவனால தாங்கிக்க முடியவில்லை.
கதிரின் வரவுக்காக காத்திருந்தவன், அவன் கார் வரவும் அவனுக்கு முன்சென்று நின்றவன் "அத்தான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் நேரயிருக்குமா?".
கதிர் முன்னும் பின்னும் திரும்பிப்பார்த்து தன் கையை தனது நெஞ்சிற்கு நேராக சுட்டிக்காட்டி என்னையவா என்று கேட்கவும், சித்தார்த்திற்கு ஒருமாதிரி இருந்தது, அத்தான் ப்ளீஸ் தயவு செய்து நக்கல் பண்ணாதிங்க, நான் எதாவது தப்பு செய்திருந்தா மன்னிச்சிருங்க நிலா பாவம்,
எங்களுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடுங்க ப்ளீஸ் அவ பாவம், உங்க மேல உயிரையே வச்சிருக்கா ப்ளீஸ்...என்றான். ஏற்கனவே நிலாவை நினைத்து நொந்து போயிருக்கவன்கிட்ட வந்து ஆளாளுக்கு மன்னிப்புக் கேட்டதும்,’நம்ம என்ன வில்லன் வேலையா பார்த்து வச்சிருக்கோம்’ என்று நினைத்தான்.
நிலா வகுப்பில் இனியாவுடன் அமர்ந்திருந்தாள், அவளுக்கு தலைசுற்றல் லேசாக தொடங்கியிருந்தது, அதைவிட வாந்தி அடிக்கடி வர...முடியவில்லை, வாஸந்தி மேடத்தின் வகுப்பில் அடிக்கடி வெளியே செல்ல என்னவென்று நிலாவிடம் கேட்க, அவள் தன் கைசெய்கையால் வாந்தி வருது என்று சொன்னவள் வெளியே சென்றள்...
வகுப்பு முடிந்ததும் வாஸந்தி வந்தவர் கதிரிடம் வந்து, “இந்த நேரத்துல எதுக்கு நிலாவை காலேஜ்க்கு வரச்சொல்றீங்க, அடிக்கடி வாந்தி வருதுன்னு வெளியப்போறாங்க. மத்தவங்களுக்கும் தொந்தரவாயிருக்கும், ஒரு மாசம் வீட்ல இருக்கச்சொல்லுங்க, அவளுக்கும் பரவாயில்லாமல் இருக்கும்” என்றுவிட்டு சென்றார்.
கதிருக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்தான், அவளுக்கு என்னாச்சு என்று வகுப்பிற்குள் நுழைந்தவனைப் பார்த்து எல்லோரும் எழும்பி நிற்க, நிலாவும் சட்டென்று எழும்ப தலையைசுத்தி விழப்போகவும் தன்னைமீறி இனியாவை பிடிக்க , அவள் சுதாரித்து பிடித்துகொண்டாள், அப்படியே இனியாவின் தோளில் மயங்கி சரிந்திருந்தாள்.
கதிருக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை, பின் சுதாரித்தவன் மனையாளை அவனது கைகளில் துக்கியிருந்தான் அந்தக் கல்லூரியின் வளாகத்தை எப்படிக்கடந்தான் என்றால் தெரியாது,
பின்னாடியே இனியா ஓடிவந்திருந்தாள், காரில் அவளை பினபக்கம் படுக்க வைத்துவிட்டு இனியாவை அருகே இருக்கவைத்து மருத்துவமனைக்கு சென்றான்...
இன்னும் கல்லூரியில் இனியாவிற்குகூடத் தெரியாது இருவரும் பிரிந்திருப்பது.
அவளை மருத்தவமனையில் சேர்த்துவிட்டு வெளியில் இருக்க சிறிது நேரத்தில் கண்விழித்துவிட்டாள், அதற்குள்ளாக மருத்தவர் அவளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
அருகிலிருந்த இனியாவிடம் அவர் கேட்டார்
எங்க மயங்கி விழுந்தாங்க என்று இனியா நடந்ததைக் கூறவும்... அவர் கல்லூரியிலா...ஓ...இவங்க வீட்ல யாரையாவது வந்து என்னப் பார்க்க சொல்லுங்க என்க...
இனியாவோ வெளியே நின்ற கதிரினை அழைத்து அவங்க கணவர்தான் என்றதும்...
மருத்தவர் கதிரினை மேலும் கீழும் பார்த்துவிட்டு, அவங்க கர்ப்பமா இருக்காங்க... அதனாலதான் மயங்கியிருக்காங்க அதைவிட அவங்க ரொம்ப பலவீனமாக இருக்காங்க அதுதான் சோர்வில் மயங்கிட்டாங்க...
வேணும்னா அதுக்குண்டான எல்லாம் பார்த்திட்டுப்போங்க என்றுவிட்டு, அவளுக்கு மருந்து மாத்திரைகளுக்கான எல்லாவற்றையும் கதிரின் கையில் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்...
கதிர் என்னமாதிரி உணர்கின்றான் என்று அவனுக்கேத் தெரியவில்லை, அப்படியே அங்கு போட்ப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவன் நிலாவையே வச்சக்கண்ணு வாங்கமல் பார்த்திருக்க, இனியா மெதுவாக வெளியே சென்றுவிட்டாள்...
இப்போதுதான் அன்று அவள் "நாங்கள்" சொன்னதற்கானக் காரணமா, முக்கியமான விசயம்னு சொன்னாலே ஐயோ எப்படியான நிலையில் அவளை வீட்டைவிட்டு அனுப்பிருக்கேன் என்று நெற்றியில் அடித்துக்கொண்டவன் நிலாவின் அருகில் சென்று அவளது கையைப்பற்றியிருந்தான், ஆனால் அவளோ அதற்கான எந்தவிதமான எதிர்வினையையும் காண்பித்துக்கொள்ளவில்லை...
அவள் மெதுவாக எழும்பியதும் அவளைத்தாங்கிப் பிடிக்கப்போக தனது கைசெய்கையாலே வேண்டாம் என்றுத் தடுத்தவள் வெளியே வரவும், இனியா அங்கியிருந்தாள்.
அவளதுக் கையைப்பிடித்துக்கொண்டு நடந்து வெளியே வந்தனர், கதிர் இனியாவை அழைத்து கல்லூரிக்கு திரும்ப போகணும் வண்டியிலேறுங்க என்றான்.
இருவரும் தங்களது விசயம் வெளியத் தெரியக்கூடாதென்று மிகவும் கவனமாக நடந்துக்கொண்டனர்...
கல்லூரியில் இருவரையும் இறக்கிவிட்டவன் "இனியா நீ உள்ளப்போ, நான் நிலாவை மெதுவா கூட்டிட்டுவர்றேன், ரொம்ப நன்றிம்மா உதவிக்கு என்றான்"
இனியா "நன்றி எதுக்கு சார் சொல்றீங்க என் பிரண்ட்க்கு உதவி செஞ்சேன்" என்றவள் சென்றுவிட்டாள்.
காரிலிருந்த நிலாவின் முகத்தை தன் கைகைளில் ஏந்தியவன் அவளது நெற்றியில் முத்தம் வைக்க, சட்டென்று அவனைத் தள்ளிவிட்டவள் இறங்கி வகுப்பிற்குள் நடந்துவிட்டாள்...
கதிர் இதை எதிர்பார்க்கவில்லை, என்ன செஞ்சாலும் அவனது முகத்தைப் பார்த்து நிற்கும் மொசக்குட்டி தள்ளிவிட்டுட்டுப் போறாள், அவளிடம் மாற்றம் எப்பவும் என்னிடம் வம்பிழுக்கும் நிலா இவளில்லை என்றுதான் தோன்றியது அவனுக்கு...
அப்படியே சிறிது நேரம் நின்றவனுக்கு தன் கடமை நினைவுக்கு வர வகுப்பிற்கு சென்றுவிட்டான்...
மதியம் நிலாவை அழைத்துவரச் சொல்லி அட்டண்டரிடம் சொல்ல, அவனோ அவங்க அப்பவே அனுமதி வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டாங்களே என்று சொன்னதும் கதிருக்கு கோபம் ஒருபுறம், அவள் போயிட்டாளே என்று ஆற்றாமை ஒருபுறம்... என்ன செய்யவென்று யோசித்தவனுக்கு நியாபகத்திற்கு வந்தவர் மணியரசுதான்.
இவங்க இரண்டுபேருக்கும் கிடைச்ச நல்லதொரு அடிமை அழைத்ததும்
"சொல்லுங்க ஆலம்பனா" என்று வந்து நிற்பவர்...
அவருக்கு அழைத்து விசயத்தை சொல்லவும் அவ்வளவு சந்தோசம் அவருக்கு... அடுத்த ஐந்தாவது நிமிடமே நிலா வீட்டில் எல்லோருக்கும் விசயம் தெரிந்திருந்தது...எல்லோருக்கும் சந்தோசம்...ஒருவரைத் தவிர...
கல்லூரியிலிருந்து இப்போதுதான் சித்தார்த் அவளை அழைத்து வந்திருந்தான், இவள் போனில் அழைத்து எனக்கு உடம்பிற்கு முடியலை என்னை வந்துக்கூட்டிட்டுப்போ என்று சொன்னதனால்...இல்லையென்றால் சித்தார்த் கண்டிப்பா கதிரைப் பார்த்து பேசியிருந்திருப்பான்...
ஜோதிதான் "மருமகன்தான் ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போனங்களா என நிலாவிடம் கேட்க அவள் ஆமென்று தலையாட்டினாள்"
அவர்களுக்கு இப்போது நிம்மதி... நிலாவை கதிர் கண்டிப்பா கூட்டிட்டுப்போயிடுவான் என்று நம்பினர்...இங்கு ஒருத்திக்கு கூட்டிட்டுப் போயிடுவானோ என்ற கவலை...
நிலாவைக் குடும்பத்தினர் சேர்ந்து தாங்குவதை பார்த்தவளுக்கு, எனக்கும், என் பிள்ளைக்கும்
இந்தவீட்ல பாசமே கிடைக்கமாட்டுக்குது...
அவளோட குழந்தைக்கு இப்பவே வரவேற்பைப் பாரு என்றுதான் நினைத்தாளே தவிர, தனது தங்கையும் தங்கையின் வயிற்றில் வளரும் குழந்தையும் நல்லாயிருக்கனும் என்று அவள் ஒரு நொடிக்கூட நினைக்கவில்லை...
ஜோதி தன் மடியில் படுத்திருந்தவளின் தலையை மெதுவாக வருடிக்கொடுக்கவும், தூங்கிவிட்டாள்...
சோபாவில் படுத்திருந்தவள் விழுந்திடக்கூடாதென்று தமையன் காவல் இருந்தான் அருகில்...
செய்த தவறு சிலரின் மனதை திருத்தும், சிலரது மனதினைக் கசடாக்கும்.
அதற்கு உதாரணம் சித்தார்த் திருந்தியிருந்தான், நித்யாவோ மனதினை இன்னும் குப்பையாக்கி வைத்திருந்தாள்...
இரண்டு நாள் கழித்து நள்ளிரவு நேரம் நிலா வீட்டினர் முன் கதிர் அதீதக் கோபத்தில் கண்கள் சிவந்து ருத்ரனாக நின்றிருந்தான்...
அத்தியாயம்-18
கதிர் சென்னைக்கு சித்ராவை அழைத்துக்கொண்டு வரும்போது அவர் பேசினார், அன்றைக்கு இருந்த கோபத்தில் நிலாவை வெளியனுப்பிட்ட, எனக்குமே கோபமிருக்கத்தான் செய்தது, அதுக்குபிறகுதான் நினைத்தேன் அந்தப்பொண்ணு நித்யா செய்ததற்கு நிலா என்ன செய்வாள். அப்பவேயிருந்து உன்னைத்தான் கல்யாணம் செய்வேன்னு பிடிவாதமாயிருந்து கட்டிக்கிட்டாள்...அவ உன் மனைவி கால முழுவதும் உன்கூட வாழறதுக்குத்தான் ஆசைப்பட்டு கல்யாணம் செய்தாள்...
என் வீட்டுக்காரர் இல்லைனு, அவளை வாழவிடாமல் வீட்டைவிட்டு அனுப்பினா அது பெரிய பாவம்...உங்கப்பாவே இதை மன்னிக்கமாட்டாங்க.
இதெல்லாம் நடக்கனும்னு இருந்திருக்கு அவ்வளவுதான், இனி எந்த பிரச்சனையும் வேண்டாம். அவளை அழைச்சிட்டு வா... நடந்தது நடந்ததுதான். இனி எதையும் மாற்ற முடியாது...நீ அவக்கூட சந்தோசமா வாழ்றதுதான் உங்கப்பாவோட ஆன்மாவிற்கு நீ கொடுக்குற நிம்மதி என்றார்.
அவனுக்குமே அவளை நினைத்து மனது இடிக்கத்தான், செய்தது...
நம்மளோட எல்லாக் கோபத்தையும் தாங்கியவள், என்னைப் பூரிந்துக்கொள்வாள், எப்படியும் மொசக்குட்டி எல்லாக் கோபத்தையும் உடைச்சிட்டு என்கிட்ட வந்திருவாள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டான்...
இன்று நிலாவைப் பார்த்ததும் அதிர்ந்தான், இரண்டு வாரங்களில், இன்னும் மெலிந்து கண்களை சுற்றி கருவளையம் வந்து ஏதோ சோகச்சித்திரம் போல் இருந்தாள்.
சாப்பிடுறாளா? இல்லையா? என்று கவலைப்பட்டான்.
இப்போ வேற இரண்டு உயிராயிருக்கா, இனி நல்லப்பார்த்துக்கனும்(சரிதான் மாம்ஸ் நீயா அவளைப் பார்த்துக்கப்போற, நிலா உன்னை ரொம்ப நல்லப் பார்த்துப்பா...)அவனுக்கு அப்படியே அவளை வீட்டிற்கு தூக்கிட்டு வந்திரலாம்னுதான் இருந்தான் அதுக்குள்ள
அவள் வீட்டிற்கு போய்விட்டாள்...
கதிருக்கு செமக்கோபம் வீட்டிற்கு வந்தவன்,சித்ரா சோபாவில் அமர்ந்திருக்கவும் அப்படியே அவரது மடியில் தலைவைத்துப்
படுத்துக்கொண்டான்...
அவனுக்குமே இதுக்குமேல் முடியவில்லை, நிலாவைப் பார்த்ததே கண்ணுக்குள் நின்றது.
அவனுக்கு கோபமிருந்தாலும், நிலாவைப் பார்த்ததும் எல்லாக் கோபமும் இப்போது பின்னுக்குச் சென்றது...
ம்மா...நிலாவைப் பார்த்தேன்மா...மயங்கிவிழுந்திட்டாம்மா... என்று நடந்த நிகழ்வைச் சொன்னான்.
அவருக்கு ரொம்ப சந்தோசம், வாழ்க்கையே வேண்டாம் என்றிருந்த மகனுக்கு, திருமணமாகி குழந்தையும் வரப்போகுது என்றதும் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி...அவனது தலையைக் கோதிவிட்டார், இருவரும் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தனர்...
மெதுவாக உங்கப்பா வந்து உனக்கு பையனா பிறக்கப்போறாங்க...என்று சித்ரா சொல்லியதும் சட்டென்று எழும்பியவன் "நானும் அதைத்தான் நினைத்தேன்மா, எப்பவும் அப்பா நம்மக்கூடவே இருப்பாங்க" என்று சொல்லவும், இருவருக்குமே மகிழ்ச்சி.
நம்ம போய் நிலாவை அழைச்சிட்டுவருவோமா? என்று சித்ரா கேட்கவும்,வேண்டாம்மா காலையிலயே என் அருமை மச்சானும் வந்து என்கிட்ட சமாதானம் பேசினான்.அதனாலதான் நிலாவக் கூப்பிட்டுக்குறோம்னு நினைப்பாங்க... இரண்டுநாள் பொறுங்க பார்ப்போம் என்றவன் தனதறைக்குள் சென்றான்...
அடுத்த நாள் கல்லூரிக்குச் சென்றவன் நிலாவின் வருகையை எதிப்பர்க்க அவளோ வரவில்லை...
உடனே அவளது போனிற்கு அழைக்க அது உயிரில்லை என்று வந்தது... செமக்கோபத்தில் போனைத் தூக்கி எறிஞ்சிடலாமா என நினைத்தவன் பொறுமையைக் கடைபிடித்தான்...
இரண்டாவது நாளும் நிலா கல்லூரிக்கு வரவில்லை என்றதும் இந்த நிலையில் அவளை பார்க்க முடியவில்லையே என்று ஏங்க ஆரம்பித்தான். அவனுக்கே அவன் மேல் கோபம் வந்தது...
எந்த வேலை செய்தாலும் நிலாவே கண்முன் வந்தாள்...தன்மானத்தைவிட்டு அவளை தென்னவன் வீட்டிற்குச் சென்று அழைக்கவும் பிடிக்கவில்லை...
மறுபடியும் அவளுக்கு போனில் அழைத்துப் பார்த்தான், அழைப்பு சென்றும் இப்போது அழைப்பு ஏற்கப்படவேயில்லை...அழைத்து அழைத்துப் பார்த்து சோர்ந்தான்.
வீட்டிற்கு வந்தவன் அப்படியே போய் படுத்துவிட்டான்..சாப்பிடவும் இல்லை...
அங்கு நிலாவோ அவனது அழைப்பை பார்த்துக்கொண்டிருந்தாள் எடுக்கவேயில்லை...நித்யா முன்னறையிலிருந்து அவளை நோட்டாமிட்டுக்கொண்டிருந்தாள்.
இரண்டு நாளும் நித்யா பிள்ளையை நிலாவிடம் விடுகின்ற சாக்கில் நிலாவை நோட்டம் விட்டாள். இப்போது கதிரின் அழைப்பை பார்த்ததும் திட்டம் தீட்டினாள்.
நிலாவின் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியேப் போயிட்டுவந்தாள்.
இரவில் ஜோதி நிலாவிற்கு சாப்பாடுக்கொடுக்க "வேண்டாம்மா சாப்பிட்டவுடனே வாந்தி வருது, தொண்டையெல்லாம் வலிக்குதும்மா, முடியல...எனக்கு காபித்தாங்களேன்..இந்தப் பால்வாடை, பாலைப் பார்த்தாலே வாந்தி வருதும்மா..
காபி அதிகமாக குடிக்க கூடாதுடா...இப்போ வேணா குடிச்சிக்கோ...நாளையிலயிருந்து
தரமாட்டேன்...என்றவர்
உனக்கு பிடிச்சது எதாவது செய்றேன்டா, கொஞ்சமாவது சாப்பிடு இந்த நேரத்துல வெறும் வயித்துலப்படுக்கூடாது என்றதும்
சரி எனத் தலையாட்டியவள் வெளியில் சோபாவில் படுத்துக்கொண்டாள்...
நிலாவை சிறிது சாப்பிட வைத்துவிட்டு, அவளுக்கு காபியும் போட்டுவைத்துவிட்டு...படுக்கப் போய்விட்டார் ஜோதி...
இரவு பத்துமணிக்குமேல் எழும்பியவன், தனது போனில் தவறிய அழைப்பும், ஒரு குறுந்தகவலும் வந்திருக்க அதைப் பார்த்தவன், அது தனது மனையாளிடமிருந்து என்றதும் சந்தோசத்தோடு திறந்துப் பார்த்தவனுக்கு, அவன் எதிர்பார்க்காத, அவனால் ஜீரனிக்க முடியாத தகவல் வந்திருந்தது.ஆத்திரம் மிகுதியில் இறங்கி வந்தவன் தனது காரை எடுத்து அதே வேகத்தில் நிலாவின் வீட்டிற்குள் செல்வதற்கு காரைக் கொண்டு வெளிக்கேட்டில் இடிக்க சத்தம்கேட்டு எல்லாரும் எழும்பி கதவைத்திறந்த வேகத்தில் காரை உள்ளேக் கொண்டுவிட்டான்.
அதுலயே எல்லாரும் அரண்டுவிட்டனர், இறங்கி நிலாவிடம் வந்தவன், வா ஹாஸ்பிட்டல் போகலாம் என் மேல எதாவதுக் கோபமிருந்தா என்னை என்ன வேணாலும் செய், நம்ம பிள்ளையை எதுக்கு வேண்டாம்னு அழிக்குறதுக்கு எதோ எதோ பண்ணப்போற என்றதும்...
நிலாவிற்கு வந்தக் கோபத்தில் சட்டென்று கதிரை அறைந்திருந்தாள்...
கதிருக்கோ அதிர்ச்சி, தென்னவன் "நிலா என்ன பண்ற" சத்தமிட...
நிலா அழுதாள் அவங்க என்னப் பேசுறாங்க பருங்கப்பா, என் பிள்ளைய எப்படி நான்...லூசு மாதிரி உளறுறாங்க..என்று சொல்லிப் பதறியவள் தன் வயிற்றில் கைவைத்து அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டாள்.
கதிர் தன் போனை எடுத்து அதிலுள்ள குறந்தகவலை நிலாவிற்கு காண்பித்தான்.
அவளுக்கு குழப்பம் நான் போனைத் தொடவேயில்லையே...
இது எப்படி உங்களுக்கு வந்ததுனு தெரியாது...நீங்க எனக்கு வேண்டாமானாலும் இது என்பிள்ளை...
அதப்போய் எப்படி வேண்டாம்னு சொல்லுவேன்...எனச் சொல்லவும் கண்ணீர் வந்தது அவளுக்கு.
தனதறைக்குள் சென்ற நிலா தன்னுடைய போனை எடுத்து வந்து கதிரிடம் கொடுக்க வாங்கிப் பார்த்தவனுக்கு அதில் அப்படி ஒரு தகவல் அனுப்பியதற்கான தடயமேயில்லை...
இங்க இவ்வளவு களேபரம் நடக்கும்போது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நித்யா மெதுவாக வந்து அங்கு அமைதியாக நின்றிருந்தாள்
அவனுக்குப் புரிந்தது...யாரோ அனுப்பிட்டு அழிச்சிருக்காங்கவென்று...யாரோ என்ன அவனுக்குத் தெளிவாகத் தெரியும் அது நித்யாவின் வேலையாகத்தான் இருக்குமென்று...
சித்தார்த் அதை வாங்கிப்படித்தான்.
"உன்னை எனக்குப் பிடிக்கலை,அதானல் நீ எனக்கு வேண்டாம், உன் பிள்ளையையும் எனக்கு வேண்டாம்,உன் பிள்ளைய நான் கலைச்சிட்டேன், இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"
அத்தான் நிலா எந்த நிலையிலும் யாரையும் மரியாதையில்லாம பேசமாட்டானு உங்களுக்கு தெரியாதா, இது வேற யாரோ அனுப்பிருக்கனும்...
நிலா உன் அறைக்குள்ள யாரு வந்தா...
நிலா தயங்கி அது நித்யாக்காகிட்ட அம்மா பால் கொடுத்துவிட்டாங்க... என்று முடிக்கதிற்குள்ளக கதிர் நித்யாவின் கழுத்தைப் பிடித்து நெறித்து சுவரில் சேர்த்து பிடித்திருந்தான்.
நித்யா மூச்சுவிட முடியாமல் கைகாலை அடிக்கும்போதுதான் விட்டான்...
சொல்லுடி என்ன செய்துவச்சிருக்க, நிலாவிற்கு என்னது கலந்துக் கொடுத்த, உன்னை இப்பவே போலிஸ்ல பிடிச்சிக்குடுக்குறேன் என்றதும்
அது அது நான்தான் அனுப்பினேன்..அனுப்பிட்டு அழிச்சிட்டேன்..
சித்தார்த் இப்போது அவளை அடித்தான். சொல்லு என்ன செய்து வச்சிருக்க என்றான்.
நிலாவைத்தான் எல்லோரும் தாங்குறீங்க, அதுவுமில்லாமல் நிலா நல்ல வாழ்க்கை வாழறா, நான் மட்டும் தனியா இருக்கேன்,
அதவுமில்லாமல் நிலாவோட பிள்ளையை அழிச்சிட்டா, அவ மாப்பிள்ளைக்கு நிலாமேலக் கோபம் வந்து இரண்டுபேரும் பிரிஞ்சிடணும்னு செய்தேன்..என்றாளேப் பார்க்கலாம்
தென்னவன் வந்து அவளது கழுத்தைப்பிடித்து செத்துப்போ இப்படியொரு ராட்சஷியா நீ...அய்யோ இப்படியொரு விசத்தையா நான் பெத்து வளர்த்தேன் என்று விட்டால் இப்பவே கொன்றுப்போடும் வெறியில் இருந்தார்.
கதிர் நிலாவின் கையைப்பிடித்து வா இப்பவே ஹாஸ்பிட்டல் போகலாம் பாலில் எதாவது கலந்திருந்தா, அது உன்னைப் பாதிக்கறதுக்கு முன்னாடி ஹாஸ்பிட்டல் போவோம் என்று பதட்டப்படவும்...
அவனது கையை நிதானமாக எடுத்தவிட்டவள்...
அதுக்கு அவசியமில்லை... நான் அந்தப் பாலை குடிக்கவேயில்லை...
இப்போது நித்யா சொன்னாள் அந்தப் பாலில் கருகலையறதுக்கு மாத்திரை வாங்கிப்போட்டேன் ... எல்லோரும் அப்படியே வாயில் கைவைத்து நின்றுவிட்டனர்...
ஜோதி நித்யாவிடம் கேட்டார் நான் எப்போடி உன்கிட்ட நிலாவிற்கு பால் தந்துவிட்டேன்...என்னடிப் பிரச்சனை.ஐயோ ஒரு பெண் செய்யக்கூடியக் காரியமா இது.. உனக்கு என்று கேட்டு அவளை அடித்தார்...
நிலாவிற்கோ அதிர்ச்சி தன்னையறியமலயே கதிரின் கையைப்பிடித்திருந்தாள்... அவளது கைகால் எல்லாம் பயத்தில் கிடுகிடுவென்று ஆடியது... கதிர் சட்டென்று அவளைப்பிடித்து இழுத்து தன் நெஞ்சோடு அணைத்திருந்தான்...
இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என்று கதிர் நினைக்க, தன் அக்காவே இப்படி தனக்கு செய்யக்கூடுமோ என்று அதிர்ச்சி, வெறுப்பு, நிதாமனயாவை நினைத்து...
தென்னவனும், ஜோதியும் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டனர்...
சித்தார்த் கேட்டான் "எதுக்கு இப்படி செய்த, நிலா உன் சொந்த தங்கச்சி, அவளுக்கு எப்படி இப்படி செய்ய முடிஞ்சது உன்னால” என்றுக்கேட்டவன்...
தயவுசெய்து நீ எங்களைவிட்டு எங்கயாவது போயிடு... இப்படிப்பட்ட பாவத்தைச் செய்றவ நாளைக்கு எங்களையும் மருந்து வச்சு கொன்றுவ... என்றவன் ஓரிடத்தில் அமைதியாக நின்றான்.
கதிர் நிலாவைத்தான் பார்த்திருந்தான்...மனையாளை.இருக்கையில் அமர்த்தியவன் கேட்டான்..
"உண்மையில் அந்தப் பாலைக் குடிக்கலைதான என்று மறுபடியுமாக கேட்டான்"
இல்லை என்றவள் பால் வாடை பிடிக்காம வாந்திப் பண்ணிட்டேன், திரும்பி வந்து அதை தூர ஊத்திட்டேன்...
ஒரு மாதிரி மூச்சுமுட்டிச்சு அதான் ஹாலில் வந்து உட்கார்ந்திருந்தேன், அப்போதான் என் போனை எடுத்திருக்கனும்...நீங்க வரதுக்கு அரைமணி நேரம் முன்னாடிதான் இது நடந்துச்சு என்றாள்...
தென்னவன் உடனே நித்யாவின் கணவனுக்கு போனில் அழைக்க சொன்னவர் தன்னுடைய அறைக்குள் சென்றார்...ஒரு பையை எடுத்து வந்தவர் ஜோதியின் கையில் கொடுத்தார்...
தென்னவன் பேசினார் கதிர் மாப்பிள்ளை தயவுசெய்து நிலாவை உங்ககூட அழைச்சிட்டு போங்க மறுபடியும் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன், இங்க நடந்ததற்கு...
நிலா சுதாரித்தவள் நான் அங்கப் போகமாட்டேன்... எனக்கு அங்கப்போக பிடிக்கவில்லை என்று கதிரைவிட்டு விலகிப்போக...
அவளது கரத்தினைப் பிடித்து இழுத்து தன்னருகில் கொண்டுவந்தவன்...
அவளை அப்படியேத் தூக்கியிருந்தான், அவள் அவனிடமிருந்து இறங்கிவரப் போராடினாள். அவன் இன்னும் இறுக்கிப் பிடித்துக்கொண்டான்...
அவளால் இறங்க முடியவில்லை...காரினுள் அவளை விட்டவன், இறங்கிப்போன, என்னை உயிரோடவே பார்க்கமுடியாது, அப்படியே காரை ஓட்டிப்போய் எங்கயாவது மோதிடுவேன், உனக்கு எப்படி வசதி என்று கேட்டு நிறுத்தினான்.
கணவன் சொன்னதைச் செய்வான் என்று தெரியுமாதலால் ஒன்று சொல்லாமல் அமைதியா இருந்தாள், வண்டியை எடுத்து தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தான்...
சித்ரா கதிர் சென்ற வேகத்திற்கு பயந்து என்ன பிரச்சனையோ என்று தூங்காமல் அமர்ந்திருந்தார்.
நிலாவைக் கண்டதும் சந்தோசத்தில் அவளது கையைப் பிடிக்க, அப்படியே அவரது கரத்தினை தன்னிடமிருந்து பிரித்தெடுத்துவிட்டாள்...
சித்ராவின் முகம் மாறியது, எப்பவும் குழந்தையாக தன்னிடம் வரும் நிலாவாக அவளில்லை, முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாது நின்றிருந்தாள்...
தென்னவன் வீட்டில் நித்யாவோ...வீட்டின் வெளியே நின்றிருந்தாள்...
அவளது கணவன் வந்ததும் தென்னவன் பேசினார், உன் மனைவி பிள்ளைய இப்பவே அழைச்சிட்டு போற, இல்லைனா
போலிஸ் ஸ்டேசன்ல புகார் செய்துடுவேன், வரதட்சனைக் கேட்டு கொடுமை படுத்துறனு,
எனக்கு எல்லா இடத்துலயும் ஆளிருக்கு உனக்கு ஏற்கனவேத் தெரியும்தான என்று மிரட்டினார்.
ஜோதி வந்தவர் தனது கையிலிருந்த பையக்கொடுத்து இதுல உனக்குள்ள நகையிலக் கொஞ்சம் தர்றேன், அப்படியே போயிடு...
உன்னைய மாதிரி ஒரு பிள்ளை என் வயித்துல பிறந்ததுக்கு கேவலமாயிருக்கு..என்ன நடந்தாலும் என் கண்ணுல முழிக்காத, எங்களைப் பொருத்தவரை நீ செத்துப்போயிட்ட...என்றவர் உள்ளே போய்விட்டார்.
உனக்கும் இந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு ஏற்கனவே காவல்நிலையத்தில்
எழுதி தந்திருக்க...நாங்க செத்தாலும் எங்களை பார்க்க வந்திராத...என்ற தென்னவன் நித்யாவைத் துரத்திவிட்டுட்டார்...
இங்கு கதிர் வீட்டிலோ நிலா சித்ராவின் கையை விடுவித்தவள் தனதறைக்கு சென்று... போர்வையை எடுத்து கிழே விரித்தவள் அப்படியே
படுத்துக்கொண்டாள்.
கதிருக்கு வருத்தம் நிலா தன் அம்மாவிடம் நடந்துக்கொண்டதற்கு.நீங்கப்போய் தூங்குங்கம்மா காலையில் சரியாயிடுவாம்மா என்றவன் அறைக்குள் வந்தான், அதற்குள் நிலா படுத்து தூங்க முயற்சிக்க அவளால் தூங்கமுடியவில்லை...
அழுதுக்கொண்டிருந்தாள்... அவளருகில் சென்று அமர்ந்தவன் அவளைத் தொட... கையைத் தட்டிவிட்டவள் பால்கனியில் போய் அமர்ந்துக் கொண்டாள்.
இதற்குமேல் அவனுக்கும் இறங்கிப்போக பிடிக்காமல் கட்டிலில் படுத்துக்கொண்டான்...
இருவருக்கும் தூக்கமில்லை, கதிர் இப்படித்தான் என்றுத் தெரியும் ஆனால் தன்னை நம்பி வந்தவளை விரட்டி விட்டுட்டானே! இது அவனால் எப்படி முடிந்தது... சூழ்நிலைமாறும்போது தன்னுடைய மனதை இவங்களால் மாத்திக்க முடியுது, எந்தவிதமானக் காரணாமாகயிருந்தலும் அது எப்படி நேசிச்சவங்களை வெறுத்து ஒதுக்க முடியும், அப்படினா அவங்க என்னை நேசிக்கவில்லை அப்படித்தான அர்த்தம், வரும்...என பலவித சிந்தனையில் இருந்தாள்.
அழுதழுது எப்போ தூக்கினாள் என்றுத்தெரியாது... பால்கனியில் தூங்கியவளை மெதுவாக தூக்கி கட்டிலில் கொண்டு படுக்கவைத்தான்.
காலையில் எழும்பியவள் தான் எங்கயிருக்கோம் என்று தெளிவதற்கே ஐந்து நிமிடமாகியது...
கட்டிலில் இருந்தாள்...ஓ தூக்கிட்டுவந்து இங்க படுக்கவச்சிட்டாங்களோ என்று நினைத்தவள். முகத்தை சுளித்து இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை என்று நினைத்தவள் கட்டிலில் இருந்து இறங்கவும் தலைசுற்றி வாந்தியெடுக்க,
அவளது சத்தம்கேட்டுத்தான் கதிர் விழித்தான்.
நிலா பாதாரூமிலிருந்து வெளியே வந்தவள் கிழே அமர்ந்து கட்டிலில் தலைவைத்து அப்படியே இருந்தாள், சோர்வில் அவளால் எழும்பக்கூட முடியவில்லை...
கதிர் சென்று காப்பியுடன் வந்தவன் அவளிடம் நீட்டினான்...
நிலா அவனது முகத்தைக்கூட பார்க்கவில்லை எழும்பி மெதுமெதுவாக இறங்கியவள் சமையலறைக்குச் சென்று தண்ணிக்குடித்தாள், அவ்வளவுதான் மறுபடியும் அவளுக்கு குமட்டிக்கொண்டு வர அவளால் முடியவில்லை...
அங்கயே அப்படியே வெறுந்தரையில் படுத்துவிட்டாள்...
அத்தியாயம்-19
மனைவி என்னப் பண்றா என்று பின்னாடியே வந்துபார்த்தவனுக்கு, அவள் தரையில் படுத்திருந்ததைப் பார்த்ததும், அவ்வளவு வேதனையா இருந்தது...
அதற்குள் சித்ராவும் எழும்பிவந்திருந்தார்...
நிலாவைப் பார்த்தவர் அவளை எழுப்பி சேரில் இருக்க வைத்தார். அமைதியாக இருந்தவள் சிறிது தெளிந்து தானே காபி போட்டு எடுத்தவள் வெளியே வராண்டாவில் வந்து அமர்ந்துக்கொண்டாள்.
சித்ரா விக்கித்து நின்றார், கதிருக்கு இப்போ சிறிது புரிந்தது. நிலா தன்னை மன்னிக்கப்போவதில்லை என்று, நம்மதான் இறங்கிப்போகணும்போல( ஹப்பாட வேதியலுக்கு இப்போதான் லேசா பல்ப்பு எரிஞ்சிருக்கு)
சித்ராவை அமரவைத்து " ம்மா .. அவ என்மேல கோபத்திலிருக்கா, அதான் இப்படி அமைதியா இருக்கா... கொஞ்ச நாள்ல சரியாகிடுவா.
சித்ரா "உன்மேல் உள்ளக் கோபத்தில் என்கிட்ட பேசலைனு நீ சொல்றது நம்புறமாதிரி இல்லை, அவ என்மேலயும் கோபமாகத்தான் இருக்கா, எல்லாமே சரியாகணும். அவள் இந்த நிலமையில் இப்படி இருக்கறது நல்லதில்லை... என்கிட்ட பேசலைனாலும் பரவாயில்லை, நீ அவாகிட்ட சமாதனமா போ...பாவம் ரொம்ப சோர்ந்துப்போயிருக்கா..”
கதிர் அப்படியே தலையில் கைவைத்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்துவிட்டான்.
கோபத்தில் அதிகமாக வார்த்தைகளைப் பேசி கொட்டித் தீர்த்துவிட்டான், இப்போ சமாதானம் பேச வார்த்தைகள் இல்லைப்போல...
"ம்மா.. நீங்க சமையல் செய்து வைங்க, நான் தயாராகி வர்றேன், காலேஜ்க்கு போகணும்" என்றவன் மேலே சென்றான்.
தயாராகி வந்தவன் இன்னும் நிலா உள்ள வரலையே என்று வெளியே வந்துப் பார்த்தவன், வராண்டாவில் உள்ள சாய்வு நாற்காலியில் சோர்ந்துப் படுத்திருந்தாள்...
அவளருகில் சென்றவன் அவளை லேசாகத்தட்டி எழுப்பி வா சாப்பிடலாம் என்க, யாரோ என்னவோ பேசுறாங்க என்று திரும்பவும் கண்களை மூடிக்கொண்டு தூங்கராம்பித்தாள்...
என்னடா கதிருக்கு வந்த சோதனை...இவளை நான் எப்படி சமாதானப்படுத்தி சாப்பிடவைக்க என்று யோசித்தவன்..
நீ இப்போ சாப்பிட வரலைனா தூக்கிட்டுப் போயிடுவேன் என்றான், அதற்கும் அசைந்தாளில்லை...
இதுக்குமேல என்ன செய்யவென்றுத் தெரியவில்லை... வீட்டிற்குள் வந்தவன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு போக தயாராகி அவளிடம் வந்து நின்றான், நீ சாப்பிடலைன்னா நானும் சாப்பிடமாட்டேன் எத்தனை நாளானாலும் சரி எனக் கூறியவன் காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
சித்ரா வெளியே வந்து பார்த்தவர் மகன் சாப்பிடாம போறான், மருமகள் இப்படி கோபத்திலிருக்கா என்ன செய்யக் குடும்பம் இப்படியிருந்தா எப்படி?
நிலாவின் அருகில் சென்றவர் "நிலாம்மா என்றதும் கண்விழித்துப் பார்த்தாள், எழும்பி உள்ளவா கொஞ்சம் பேசணும்"
நிலா எழும்பி உள்ள சோபாவில் அமரவும், பேசத்தொடங்கினார் "தகப்பனை பறிகொடுத்திட்டிருந்த வேதனையில் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டான், எல்லா மனுஷங்க மாதிரிதான் அவனும், அதுவும் உங்க வீட்டு ஆட்கள் செய்தது அவன் மனதை ரொம்ப பாதிச்சிருந்தது,அதுதான், அப்படி பேசிட்டான், புருஷன் பொண்டாட்டி சண்டை எல்லாயிடத்துலயும் உள்ளதுதான், அதுக்கென வாழாமயிருக்க முடியுமா, அவன் நடந்துகிட்டதுக்காக நான் வேணும்னா உனகிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்” என்றதும் விறுவிறுவென்று தங்களது அறைக்குள் அவரைத் திரும்பி பார்க்கமல் வந்து கட்டிலில் படுத்து அழுதாள்...
எல்லாரும் நினைச்சா வந்துப் பேசுவாங்க நினைச்சா வீட்டைவிட்டு துரத்துவாங்க என்று நினைத்தவள், பசி சோர்வு எல்லாம் சேர்த்து அப்படியே அரைமயக்கத்தில் ஒரு தூக்கம்...
எவ்வளவு நேரமோ திடீரென்று அவளது தலையை யாரோக் கோதிவிட அதில் விழிப்புத்தாட்டியவள் எழும்பி பார்க்க அவளது அம்மா...
அப்படியே அவரது மடியில் தலைவைத்துப் படுத்தவளை, எழும்பு சாப்பிடாம இருக்கியாம் மருமகன் போன் பண்ணிச் சொன்னாங்க, வா உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிடு என்றவர் எடுத்து அவளிடம் கொடுக்க அவசரவசரமாக சாப்பிட்டாள், விக்கல் எடுக்க தண்ணீரை ஒருகரம் நீட்ட, வாங்கிக்குடித்துவிட்டு பார்த்தாள் அங்கே கதிர் நின்றிருந்தான்...
அப்படியே முகத்தை திருப்பிக்கொண்டாள்
"இவ்வளவு பசியையும் வச்சிக்கிட்டு பிடிவாதம் பிடிக்குற, இப்போ உங்கம்மா வரலைனா இப்படியே பசியிலயே அழுதழுது மயங்கி கிடப்பியா" என்று பேசியவனின் குரல் நெகிழ்ந்து கமறியது...
அத்தை அவக்கிட்ட பேசிப் புரியவைச்சிட்டுப் போங்க, அம்மா சாப்பிட சொல்லிருக்காங்க, ஒன்னும் சொல்லாமல் இங்க வந்து படுத்திருக்கா, அம்மா எனக்கு அழைத்து என்கிட்ட விசயத்தைச் சொல்றாங்க, அவங்களுக்கும் இப்போ ரொம்ப வருத்தம்..
எல்லாத்தையும் மறந்து அவளோடு வாழத்தான் ஆசைப்படுறேன்...புரியவைங்க என்றதும் நிலா எழும்பி எதோ சொல்லவந்தவள் அப்படியே அடக்கிக்கொண்டு கோபத்தில் சண்டையிடக்கூட அவனோடு பேச விருப்பமில்லாது, மறுபடியுமாக அமர்ந்துக்கொண்டள்...
கதிர் அதைத்தான் அவளிடம் எதிர்பார்த்தான் மனசுலவுள்ளத கோபத்தில் வெடித்துப் பேசிவிட்டாள் மன சமாதானமாகும் என்று...எங்க?
ஜோதி மகளின் கையைப்பிடித்து வைத்துக்கொண்டு நீங்க போங்க நான் பேசிக்குறேன்...
அவசரபுத்தி கதிருக்கு மரத்துல மாங்காய் பறிக்குற மாதிரி பொண்டாட்டி மனசும் டக்கு டக்குனு மாறிடனும்னு நினைச்சா நடக்குமா...
கதிர் சென்று அவன் அம்மாவோடு அமர்ந்தான், அவர் நிலா மதியமும் சாப்பிடலை அப்படியே கட்டில்ல படுத்திருக்கா என்று போனில் சொன்னதும் உடனே வந்துவிட்டான்.
நிலா இப்படி அமைதியாவும் அதுலயும் இப்படி பட்டினியா இருப்பதை அவனது மனம் இளகியது ...அவளது பிடிவாதக் குணத்தை இப்போதுதான் பார்க்கின்றான்.
ஜோதி "ஏன் இப்படி பண்ற, இது நீ விரும்பி ஏத்துக்கிட்டு வாழ வந்த வாழ்க்கை, அதை யோசிச்சிக்கோ, நாங்க வேண்டாம் என சொன்னதுக்கு, நீ எங்ககிட்ட என்ன பேச்சிப்பேசின, இப்போ எங்கப்போச்சு எல்லாம்"
நிலா " இதுதான் நேரம்னு எல்லாத்தையும் சொல்லிக் காட்டுறீங்களா" என்று கேட்கவும்.
நிலா நீ எங்கிட்ட அடிவாங்கப்போற, ஒழுங்காப் பேசு என்று அதட்டினார்...
நீயே சொல்லு அவருக்கு நடந்த மாதிரி நம்ம சித்தார்த்திற்கு நடந்திருந்த உங்கப்பா அந்தப் பொண்ணு குடும்பத்தை சும்மா விட்ருப்பாங்களா?
" இல்லை" என்று தலையாட்டினாள்.
உன் மாமானார் மாமியார் என்னைக்காவது அந்தக்கோபத்தை உன்கிட்ட காண்பிச்சிருக்காங்களா, இல்லைல...
அது அவங்களோடப் பெருந்தன்மையைக் காட்டுது. அதைவிடு கதிர் மாப்பிள்ளை உன்னை வேற எந்தவிதத்துலயாவது காயப்படுத்திருக்காங்களா?
அதற்கும் இல்லையென்று தலையாட்டினாள்...
"அவங்கப்பா இப்படி இறந்துப்போனதுக்கு நம்மக்குடும்பம் முதல்க்காரணம், அந்தக் கோபத்துல பேசிருப்பாங்க, விடு அதெல்லாம் மன்னிச்சுடு, கோபத்தல செய்திட்டு இப்போ வருத்தப்படுறாங்கடா,
பாவம் நீ பட்டினியா இருக்கனு என்னை வீட்டுக்கு வந்து கூட்டிட்டு வந்தாங்க
உனக்குப் பிடிச்ச சாப்பாடு என வாங்கித் தந்தாங்க" என்று சொல்லவும்.
அவரை முறைத்துப் பார்த்தாள் அப்போ இது நீங்க வாங்கிட்டு வந்ததில்லையா...
அவங்க வாங்குனது எனக்கு வேண்டாம் என்று தள்ளிவிட ஜோதி சட்டென்று அடிக்க கை ஓங்கிவிட்டார்...
"நீங்க எல்லாரும் தப்பு செய்தீங்க நான் என்ன செய்தேன்... பதினேழு வயசுலயிருந்து கதிர் மாமாதான் வேணும்னு ஊணிலிலும் உறக்கத்திலும் நினைச்சித்தான் அவரக் கல்யாணம் செய்தேன்... அவரால எப்படிம்மா என்னை கைபிடிச்சி வெளியக்கொண்டுவிட முடிஞ்சுது?
அப்போ என்கூட வாழ்ந்ததெல்லாம் பொய்தானாம்மா...எல்லாத்தையும் மனசுக்குள்ள வஞ்சமா வச்சிட்டுத்தான
குடும்பம் நடத்திருக்காங்க ...சந்தர்ப்பம் வந்தவுடனே அந்தக்குணம் வெளியவந்திட்டு அப்படித்தான...
இதற்கு ஜோதியால் பதில் சொல்ல முடியவில்லை அமைதியாக இருக்கவும்...
அவங்கவங்களுக்கு என ஒரு நியாயம்.ஒரு தப்பு செய்யாம தண்டனை அனுபவிக்குற எனக்கு கோபம் வரக்கூடாதா என்ன, எல்லார் கோபத்தையும் தாங்கி நின்ன எனக்கு கோபம் வந்தா ஆளாளுக்கு அறிவுரை சொல்றீங்க...
நானும் மனுஷிதான எனக்கும் மனசு என ஒன்னு இருக்குது, அது வலிக்கும்னு தெரியலையா? இல்ல இவளுக்கு மனசே இல்லனு நினைச்சீட்டீங்களா?
கையைப்பிடிச்சு வெளியக்கொண்டு விடும்போதே நிலா செத்துப்போயிட்டா. என் காதலும் அந்தயிடத்துலயே என் மனசோடு சேர்ந்து செத்துப்போச்சிது” என்றுக் கதறினாள்...இப்போ அவங்கவீட்டு பிள்ளை என் வயித்துல, அந்த ஒரு காரணத்துக்காகத்தான் இவ்வளவும் பண்றாங்க..இல்லைனா என்னைத் திரும்பிக்கூட பார்த்திருக்கமாட்டாங்க...
யாரும் பாசத்துலயோ! அன்பினாலயோ!
என்னை இங்க அழைச்சிட்டு வரவில்லை...
அதை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு...செத்துப்போயிடனும் போல இருக்கு.. இந்த நிலா அவங்களுக்கு அவ்வளவுக் கேவலமாப்போயிட்டேனா?
கதிர் அவள் சத்தம்போட்டுப் பேசும்போதே ஓடி வந்தவன் எல்லாவற்றையும் கேட்டிருந்தான், தான் செய்த செயலின் வீரியம் இவ்வளவா? அவளை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று கண்கள் கலங்கியது...
அவளருகில் வந்து மண்டியிட்டு அமரவும், ஜோதி அறையிலிருந்து வெளியேறிவிட்டார்.
கதிர் அவள் கையைப்பிடித்துக்கொண்டு பேசத்தொடங்கினான,"அப்போயிருந்தக் கோபத்துல அப்படி நடந்துக்கிட்டேன்,பழிவாங்கணும் அப்படி இப்படினு வேற எண்ணமெல்லாம் சுத்தமா எனக்கு கிடையாது, ஒன்னுமட்டும் உறுதி பொண்ணு நீயென்றதுனாலதான் நான் கல்யாணமே செய்தேன் இல்லைனா நடந்திருக்காது...அப்பா சொன்னதுக்காக மட்டுமில்ல எனக்கும் உன்னை பிடிச்சித்தான் கல்யாணம் செய்தேன், அதுமட்டும் உண்மை” என்றதும்
உதட்டை சுளித்து நக்கலாக சிரித்தாள்...
“இந்த நிலாவோடக் காதல்னாலத்தான்டி இப்படியாவது உயிரோட இருக்கேன்...
இல்லைனா பைத்தியம் பிடிச்சு செத்துருப்பேன் என்றவன்...
இப்போ நான் என்னச் செய்தா நீ சமாதானமாகுவ?
அவள் வாயைத் திறக்கவேயில்லை..சிறிது நேரம் அமைதியா இருந்தவன்...
ஓகே...நான் செய்யனும்னு நினைக்கிற, உன் கால்லவிழுந்து மன்னிப்புக் கேட்கனுமா?
அவள் திரும்பி அவனைப் பார்த்த பார்வையிலயே லூசா நீ என்ற அர்த்தமிருக்க...
கதிர் இப்போது தளர்ந்துப்போனான்...எப்படி சமாதானப்படுத்தவெனத் தெரியவில்லை...
அப்படியே கீழே அமர்ந்து அவளைத்தான் பார்த்திருந்தான்...
நிலாவோ நீ என்ன வேணாலும் பேசு என்று அதுபாட்டுக்கு வேறு சிந்தனையில் இருந்தாள்...
இப்போது கதிர் அவளருகில் கட்டிலில் அமர்ந்து அவளது முகத்தைப் தன்னுடையக் கைகளில் ஏந்தியவன் ஒவ்வொரு முத்தமாக கண்களில் கன்னத்தில் என்று வைத்து சாரி சொல்லிக்கொண்டிருக்க...
இப்போதும் எந்தவித உணர்ச்சியும் அவளிடமில்லை...கதிர் கண்களைப் பார்க்க அதில் எந்தவிதமான உயிர்ப்பும் உணர்வும் இல்லையென்றதும் மெதுவாக விலகியவனிடம்...
தனது இதயத்தில் கைவைத்து எல்லா உணர்வும் அன்றைக்கே செத்துப்போச்சு... என்றுத் தனது உதட்டினை பிதுக்கி சொல்லவும்... சட்டென்று எழும்பியவன் பிரோவின் கண்ணாடியில் தன் கைகளால் வேதனையில் குத்தினான் அது உடைந்து சிதறவும் இதை எதிர்ப் பார்க்காத நிலா அதிர்ந்து எழும்பியவள் அவன் கையைப் பார்க்க இரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது...
ஐயோ இரத்தமென்று அவனிடம் நெருங்கப்போக, அங்கே கண்ணாடித்துண்டுகள் சிதறிக்கிடக்க வேண்டாம் என்று அவளைத் தடுத்திருந்தான்...
அதற்குள்ளாக சித்ராவும் ஜோதியும் உள்ளே வந்திருந்தனர்... அவர்களும் கதிரின் நிலையைப் பார்த்து அதிர்ந்து எல்லாவற்றையும் சுத்தம் செய்திருந்தனர்,
ஜோதி சித்தார்த்தை அழைத்து சொல்லவும் விரைந்து வந்து கதிரினை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.
கையில் கண்ணாடிக் கிழித்து தையல் போடுமளவிற்கு ஆழமாக காயமிருந்தது...
தையல்போட்டு எல்லாம் முடிந்து வெளியே வரவும் கதிருக்கு என்னவோபோல் இருந்தது...தன்னையே உயிராக நினைத்தவளை இப்படிக் காயப்படுத்தி வச்சிருக்கமே என்ற ஆற்றாமை...
சித்தார்த் "கதிரத்தான் நம்ம காபிஷாப் எங்கயாவது போவோமா” என அவனிடம் கேட்கவும், சரியென்று கதிர் தலையசைத்தான், பக்கத்திலிருந்த ஒரு காபிஷாப்பிற்குள் நுழைந்ததும், சித்தார்த் பேசத்தொடங்கினான் "நிலா பொதுவா எதுக்கும் பிடிவாதம் பிடிக்கமாட்டாள் அவளுக்கு இந்த அடம்பிடிச்சு வாங்கறது என்னைக்குமே பிடிக்காது, எதுக்கு கெஞ்சி வாங்கணும் என்மேல பாசமிருந்தா அவங்களே எனக்குத் தேவையானதை வாங்கித்தருவாங்களே அப்படித்தான் சொல்லுவா, அதுவும் உண்மைதான் நாங்க கஷடப்பட்டு அப்பாகிட்ட பிடிவாதம் பிடிச்சு வாங்கினப் பொருட்களெல்லாம் அவளுக்கு
தானாக கிடைக்கும்...
அவ பிடிவாதம் பிடிச்சது உங்களை கல்யாணம் பண்ணிக்கறதுல மட்டுந்தான்,
எங்களைவிடவும் உங்கமேலத்தான் அதிகமா அன்பு வச்சுருந்தா...இப்பவும் வச்சுருக்கா...
இப்பவும் அவ உங்களைவிட்டு பிரிந்துலாம் போகமாட்ட அத நம்புங்க முதல்ல...அதைவிட நீங்க இப்படி உங்களை நீங்களே காயப்படுத்திக்கிட்டா நிலா இன்னுமின்னும் தனக்குள்ள காயப்பட்டு அவளுக்குள்ள ஒடுங்கித்தான் போவாளேத் தவிர சத்தியமா மனசு இறங்கிபேசமாட்டாள், இன்னும் உங்ககிட்ட இருந்து விலகித்தான் போவாள்...
எவ்வளவுக்கெவ்வளவு மென்மைய பாசமா இருக்கீங்களோ அதுவே அவளை மனசு இறங்க வைக்கும்...
நீங்களே உங்க வாழ்க்கைய சிக்கலாக்கி வச்சிட்டீங்க” என்றவன் காபி வந்ததும் கதிருக்கு இடது கையில் எடுத்துக்கொடுத்து அவன் குடிக்கும் வரையிலும் உதவி செய்தான். கதிருக்கோ இப்போது ஆச்சர்யம்...
சித்தார்த் "புரிதல் இல்லாம பிரச்சனை நமக்குள்ள வந்திட்டு அதுக்காக மச்சானும் மச்சினனும் முறைச்சிக்கிட்டேயிருந்தா நல்லாவா இருக்கும்” கதிரத்தான்...கதிரை அவன் தோழோடு சேர்த்து விடுவித்தான்..
இருவருக்குள்ளும் இப்போது ஒரு நட்பிழையோடியது...
இருவரும் காரிலேறி வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தனர்...
இபபோது சித்தார்த் "நிலா மலையேறிட்டா எப்படி மலையிறக்கறீங்கனுப் பார்க்கலாம்...ஆன எந்த இடத்துலயும் உங்களை விட்டுக்கொடுக்கமாட்டள்...”
விட்டும்போகமாட்டாளா...என்றவன் நித்யாவிடம் நிலா நடந்துக் கொண்டமுறையை சொன்னான்.
கதிர் அவனை திரும்பி பார்க்க.. "ஆமாத்தான் இப்போ பாருங்க உங்களைத்தான தேடிட்டிருப்பா பாருங்களேன்....என்றான் சித்தார்த்.
வீட்டிற்குள் கார் நுழையவும் முதல் ஆளாக நிலாதான் காரின் சத்தங்கேட்டு வெளியே வந்திருந்தாள்.
நிலாவோ கதிரைப் பார்த்தும் பார்க்கதமாதிரி நின்றுக்கொண்டாள்...
எப்படியும் நிலா வாயைத் திறந்து கேட்கப்போறதில்லை என்று தெரிந்தும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்..
நிலா சித்தார்த்தைப் பார்க்க, அவன் சொன்னான் தையல் போட்டிருக்கு, காயம் ஆழமாயிருக்கு, கொஞ்சம் கவனமா இருக்கணும்.
அதற்குள்ளாக வீட்டிற்குள் நுழைந்திருந்தனர்...சித்ராவோ கண்களில் கண்ணீருடன் மகனின் அருகிலிருந்து அவனது கையை எடுத்து தன் மடிமீது வைத்துக் கொண்டார்.
சித்ராவும் அப்படி அமர்ந்திருக்கவும், ஜோதி சமையலறைக்குச் சென்று எல்லாம் செய்துவைத்துவிட்டு முன்னறைக்கு வந்து
மருகனிடம் செல்லிவிட்டு வந்தார்.
இப்போது ஜோதி நிலாவை தனியாக அழைத்து "கவனமா இருடா சாப்பாடுலாம் செய்து வச்சிருக்கேன்... நீ தனியாள் இல்லை. நீ பண்றது வயித்துல இருக்க உன் பிள்ளையையும் பாதிக்கும், மருமகனும் பாவம், கொஞ்சம் சமாதானமா போகப்பாரு...”என்றவர் கிளம்பிவிட்டார்.
கதிருக்கு தையல் போட்டது கொஞ்சம் வலியெடுக்க அறைக்குள் வந்து கட்டிலில் கையை நெற்றியில் வைத்துப் படுத்திருந்தான்.
நிலாவோ கணவனைத்தான் பார்த்திருந்தாள்...
அத்தியாயம்-20
கதிரின் கையைப் பார்த்திருந்த நிலா, அவன் தூங்கியதும் மெதுவாக கையைத்தொட்டுப் பார்த்தாள், வலியில் லேசாக அவன் அசையவும், திரும்ப வந்து இருந்த இடத்திலயே அமர்ந்திருந்துக்கொண்டாள்... ஏன் நல்லா போயிட்டிருந்த வாழ்க்கை இப்படியானது என்ற யோசனையில் இருந்தாள்..
" கதிரு...கதிரு..." என்று சித்ரா அழைக்கும் சத்தம்கேட்டதும் விழித்துப் பார்த்தவன்,
நிலாவின் கண்களில் கண்ணீருடன் அவனையேப் பார்த்திருந்தாள்...
அப்படியே எழும்பியவன் கீழேப்போகவும் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்திருந்தார்...வலது கையை பயன்படுத்த முடியாது என்ன செய்யவென யோசித்தவன், நிலாவை சத்தமாக அழைத்தான்...
அழைத்து சிறிது நேரங்கழித்து வந்தவள் என்ன என்ற ரீதியில் அந்த அறையின் கதவருகில் நிற்க, தனது கையைக் காண்பித்து சாப்பிட முடியலை, கொஞ்சம் ஊட்டிவிடுறியா என்று தன்மையாக கேட்க நிமிர்ந்து சித்ராவைத் தீர்க்கமாகப் பார்த்தவள்( அந்தப் பார்வையின் அர்த்தம் ஏன் உங்கம்மா இருக்க என்னைக் கூப்படிடுற என்றுத்தான்) அப்படியே திரும்பி சென்றுவிட்டாள்.
சித்ராவிற்கு கோபம் வந்தது, சாப்பாட்டை எடுத்து படபடவெனக் கதிருக்கு ஊட்டிவிட்டவருக்கு கண்ணீர் தானாக வர அதை தனது முந்தானையில் துடைத்துக் கொண்டே, அவனுக்கு சாப்பாடு ஊட்டி முடித்துவிட்டு பேசினார்...
“நீ இவ்வளவு தூரம் இறங்கிப்போற, ஆனால் அவா உன்னை எட்டி உதைச்சிடாடுப்போறா...
கதிரய்யா இது சரியில்லை சின்னபிள்ளைனு எவ்வளவுதூரம் தான் இறங்கிப்போறது, காலையில் நான் மன்னிப்புக்கேட்டு பேசினேன் என்னை மதிக்கவேயில்லை. அவளை பிடிக்கும்தான் அதுக்காக இப்படிலாம் கேவலப்பட முடியாது...”என்றவர் தூங்குவதற்குச் சென்றுவிட்டார்.
கதிருக்குமே வருத்தமாக இருந்தது நம்மளால் அம்மாவும் அழறாங்களே!
அப்பா இல்லைனு வேதனைப் படுறவங்களுக்கு, இப்போ என்னலதான் அடுத்ததொரு வேதனை என்று நினைத்து தனதறைக்குள் சென்றான்...
அங்கயோ நிலாவைக் காணவில்லை, சட்டென்று பதறி தேடிப் பார்த்தவனுக்கு பயம் ஏற்கனவே அவங்கம்மாகிட்ட செத்துப்போகணும்போல இருக்குனு சொன்னாலே என்று ஓடிப்போயி எல்லாயிடத்துலயும் தேடினான், கடைசியாக மொட்டைமாடிக்கு சென்றவன் அங்கே பார்க்க தரையில் சுருண்டுப் படுத்திருந்தாள்...
ஒன்றுமே கேட்காமல் அவளருகில் சென்று படுத்துக்கொண்டு இடதுகையால் அவளின் இடுப்போடு சேர்த்துக் கையைப்போட்டு படுத்துக்கொண்டான்...
அவள் எழும்புவதற்கு முயற்சி செய்ய ... இன்னும் இறுக்கிப் படுத்துக்கொண்டான்.
அப்படியே எவ்வளவு நேரம் படுத்திருந்தனரென்றுத் தெரியாது...விழிப்புத்தட்டியவன் எழும்பி பார்க்க... நள்ளிரவிருக்கும். அவளை எழுப்பியவன் வா உள்ளப்போய் படுத்துக்காலாம் என்றதும் அறைத்தூக்கத்தில் எழும்பி அவனுடன் வந்தவள் கட்டிலில் படுத்துக்கொண்டாள்... கதிரும் அருகில் வந்து படுத்துவன்,
"நல்லவேளை அரைத்தூக்கத்தில வந்ததுல முறைச்சிக்காம வந்திட்டா, இல்லைனா இதுக்கும் எதாவது செய்தா என்ன பண்றது, எப்பவும் அலர்ட் மோடுலயே இருக்கவச்சிட்டாளே" என்றவன் அவளுக்கு நெற்றியில் முத்தம் வைத்து, அவள் மேல் கையைப்போட்டுப் படுத்துக்கொண்டான்...
காலையில் நேரங்கழித்தே கண்விழித்துப் பார்க்க கதிர் அருகிலில்லை, காலைநேர வாந்தி,மயக்கம் எல்லாம் சமாளித்து முகங்கழுவி வெளியே வந்தவளுக்கு கீழே பேச்சு சத்தம் கேட்கவும் இறங்கி வர...
அங்கே இலக்கியா வந்திருந்தாள், இரவே சித்ரா கதிரின் நிலையைச் சொல்லிருந்தார் போல...
கதிர் காலையில் எழும்பி கீழே வந்தவனுக்கு, இலக்கியாவைப் பார்த்தும் ஆச்சர்யம், என்னம்மா இப்போ வந்திருக்க நீயும் குட்டிப்பையனும் தனியாவா வந்தீங்க... என்று தங்கையைப் பார்த்த சந்தோசத்தில் கேட்டுக்கொண்டே வந்தவன்.
தங்கையின் அருகே வந்தமர்ந்தான், அவளோ அவனது கையை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.
அவனுக்கும் அவளிடம் என்ன சொல்லவென்று அமைதியாகயிருந்தான்...
“ஏன்னா இப்படிச் செய்த? அந்தக்குடும்பத்துல எல்லாமே இப்படித்தான் திமிரு பிடிச்சதுங்க...அப்பாதான் நல்ல பிள்ளை செல்ல பிள்ளைனு சொன்னாங்க, அதுக்கு அம்மாவும் ஆமாஞ்சாமினு தலையாட்டினாங்க, கல்யாணம் முடிஞ்ச இருண்டு மாசத்துல குணம் தெரிஞ்சிடுச்சு.. அவப் பேசலைனா போறா...நீ எதுக்குண்ணா இப்படி உன்னை நீயே வருத்திக்குற? அவளை அடக்கி வைக்கவேண்டியதுதான” என்றதும்.
கதிர் “இது என்னப்பேச்சு இலக்கியா, எப்படியும் போறான்னு என்ன அர்த்தத்தில சொல்ற? அவ என் மனைவி ...வேண்டாம்னு விட்டிறமுடியுமா...”
அதுதான் ஏற்கனவே நிலா வேண்டாம்னு நீ தான அன்றைக்கே கையைப்பிடிச்சு வெளியத் தள்ளின... அப்புறம் எதுக்கு இப்போ இவ்வளவு வருத்தப்படுற...
வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவகிட்ட கெஞ்சிட்டிருக்க... என்று சொல்லிமுடித்துப் பார்க்க பின்னாடி நிலா நின்றிருந்தாள்...
இலக்கியா கோபத்தில் முறைச்சிப் பார்க்க,
கதிர் ஐயோவென்று தலையில் கைவைத்துக் கொண்டான்...
இப்போதான் கொஞ்சமா மனசு இறங்கி வந்தாள், இனி இதுக்குவேற சமாதானம் பேசனுமே...நொந்துப்போயிட்டான்.
சித்ராவும் இதைக்கேட்டுக் கொண்டிருந்தார், இலக்கியவின் பேச்சைத் தடுக்கவில்லை...
நிலா இப்போ எல்லார் முன்னாடியும் வந்து நின்றவள் "இலக்கியாவின் முகத்திறக்கு நேராக கேட்டாள் நான் இப்போ என்ன செய்யனும் இந்த வீட்டவிட்டும், உங்க அண்ணனைவிட்டும் போகணுமா?.உங்கண்ணனுக்கு என்னை கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்தும்போது தெரியலையா நான் நச்சப்பாம்புனு, மாமா இருந்தவரைக்கும் எல்லோரும் நல்லா நடிச்சிருக்கீங்க, அவங்கப்போனதும் ஒவ்வொருத்தரும் உங்களோட சுயகுணத்தை வெளியேக் காண்பிச்சுட்டீங்க...
அன்றைக்கே உங்க அண்ணா வெளிய அனுப்பும்போது அதை பார்த்து நீங்களும் அத்தையும் அமைதியா இருக்கும்போதே எனக்குத் தெரியும், நான் மாமாவ விட்டுப்போறதுதான் உங்களுக்கு விருப்பம்னு எனக்குப் புரிந்தது" என்றதும்...
சித்ரா " நிலா என்னப்பேசுற, நீயும் கதிரும் பிரிந்து, வாழமல் இருக்கறது என்ன எனக்கு சந்தோசமா. நல்லா வாழனும்னுதான் நினைச்சு கல்யாணம் பண்ணி வச்சோம்...அதுக்காக அவன் கோபத்துல செய்ததுக்கு இப்படியா அவனைக் கேவலப்படுத்துவியா..நேத்து பசியில சாப்பாடுக்கூட அள்ளிக்கொடுக்க முடியலை... கணவன் மனைவிக்குள்ள ஆயிரம் பிரச்சனையிருந்தாலும் இப்படித்தான் எல்லார் முன்னாடியும் அவனைக் கேவலப் படுத்துவியா...
கதிர் சின்னபிள்ளை சின்னபிள்ளைனு சொல்லும்போது நாங்க கேட்கமாயிருந்திட்டோம், இப்போதான் நீ அப்படி நடந்துக்கும்போது ...என் மகனை நினைச்சு வேதனையா இருக்கு...”
இலக்கியா இடையில் பேசவரவும்,கதிர் தடுத்தான்.
நிலா "ஓ... கல்யாணம் பண்ணும்போது சரியா பொருத்தமா இருந்த நான் இப்போ சின்னபிள்ளைய நடந்துக்குறேனா? உங்க பிள்ளைக்கு ஒன்னுனா வலிக்குது உங்களுக்கு... அப்போ எனக்கு நடந்ததுக்கு
நான் கோபம் படக்கூடாதா? உங்க நியாயம் நல்லாருக்கே!”
கதிர்" என்னப்பேசுற நீ அம்மாவை எதிர்த்துப் பேசிட்டிருக்க, பெரியவங்க எதாவது சொன்னா பொருத்துப் போகமாட்டியா நீ ...சின்னப்பிள்ளை மாதிரி..”என்று அதட்டினான்...
அப்படித்தான் பேசவேன் சின்னபிள்ளைனு சொல்றீங்கள அப்படித்தான் பேசுவேன் என்றவள் சிதாராவைப் பார்த்து "அன்றைக்கு உங்க இரண்டுப்பேரையும் பார்த்தேன், உங்களால் எப்படி அமைதியா பார்த்திட்டு இருக்கமுடிந்தது, எல்லாம் தெரிஞ்ச நீங்களும் மாமா செய்தது சரின்னுதான இருந்தீங்க...அதவிடுங்க அப்போதான் கோபம், வருத்தத்துல இருந்தீங்க...இந்த இருபது நாளும் இப்படி ஒருத்தி இருக்காளா இல்லையா செத்துப்போயிட்டாளானு பார்த்தீங்களா என்ன? நான் கர்ப்பமா இருக்கேனுத் தெரிஞ்சதுக்கு அப்புறமாகத்தான வந்தீங்க...”என்று சித்ரவிடம் பேசிவிட்டு,
இலக்கியவிடம் திரும்பியவள்
"உங்க அண்ணனை எங்கிட்ட வந்து யாரும் கெஞ்ச சொல்லலை, உங்க அண்ணனை என் பக்கம் வராம இருக்கச் சொல்லுங்கப் போதும், அளவுக்கு அதிகமா அன்பும், காதலும்வச்சதுக்கு, உங்கண்ணா எனக்கு எவ்வளவு பெரிய பரிசுக் கொடுத்திட்டாங்க மனசு நிறைஞ்சு இருக்கு. அதுவே என் வாழ் நாளைக்கு முழுவதும்போதும் என் பிள்ளையை எப்படி பெத்து வளர்கணும்னு எனக்குத் தெரியும்" என்றவள் ...
வெளியேச் செல்ல முயல சட்டென்று அவளதுக் கையைப்பிடித்து நிறுத்தினான்.
"அம்மா , இலக்கியா என்னயிது, பிரச்சனையப் பெருசா வளர்த்துவிடுறீங்க, தப்பு பண்ணினது நான், அத எப்படி சரிசெய்யனும்னு பார்த்துக்குறேன், நீங்க இரண்டுபேரும் இடையிலயெதுக்கு வர்றீங்க...”
நிலா நீ கொஞ்சம் பேசாமயிரு அவங்க இரண்டும்பேரும் எதோ ஆதங்கத்துலப் பேசறாங்க...
அதற்குள் நிலா அவனின் கரத்திலிருந்து திமிறினாள் இருந்தக்கோபத்தில்
"அடங்குடி, துள்ளாத அடிச்சிப் பல்லையெல்லாம் கழட்டிருவேன், எங்கயாவதுப் போறேன்னு கிளம்பின அவ்வளவுதான்" என்று சத்தம்போட்டதும் எல்லோரும் அமைதியாக இருந்தனர்...
" கோபத்தில ஒரு தப்பைத் தெரியாம செய்திட்டேன், அதைவச்சு ஆளாளுக்குப் பேசிட்டு, ம்மா இலக்கியாவை நீங்கதான் வரச்சொன்னீங்களா? ஏன்? உங்களால நிலாக்கிட்ட சண்டைப்போட முடியலைன்னா ஆள் சேர்த்து சண்டைப்போடவா?"
சித்ரா " நீ என்னடா அவளுக்கு சப்போர்ட் பணாற. நேத்து என் மகனின் கையில் இரத்தம் வடியறதைப் பார்த்து எனக்கு எவ்வளவு வேதனையாயிருந்தது, அதைதான் சொன்னேன். அவ இப்படி இங்கவந்தா பிர்ச்சனையாகும்னு நான் யோசிக்கலை.உன் மயைவிய சரிப்படுத்சப்பாரு முதல் என்றார் கோபமாக"
ஆகமொத்தம் நீங்க மூணுப்பேரும் என்னை பைத்தியமாக்க முடிவு பண்ணிட்டீங்க அப்படித்தான.
எனக்கு இப்பவே பைத்தியம் பிடிச்சிட்டு...இதுக்கு நான் கல்யாணம் பண்ணாமலயே இருந்திருக்கலாம் போல. எனத் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்...
நிலா எழும்பவும் ஏய் எங்கடிப்போற, இங்கயே என்கிட்டயே உட்காரு என அதட்டி மறுபடியும் அவனருகில் அமர வைத்துக்கொண்டான்...
இலக்கியாவும் சித்ராவும் கோபத்தில் எழும்பி அறைக்குள் சென்றுவிட்டனர்.
அப்படியே இருந்தவன் டீவியை உயிர்ப்பித்துவிட்டு அங்கயே அமர்ந்திருந்தான்.
சிறிது நேரங்கழித்து வந்த சித்ரா மெதுவாக கதிரை அழைத்தார் திரும்பிப் பார்க்க "நான் ஊருக்குப்போறேன், உன் மனைவி உன்கிட்ட எப்படி வேணும்னாலும் நடந்துக்கட்டும், ஒரு அம்மாவா அதை பார்க்க எனக்கு கஷ்டமாக இருக்கு” என்றவர் அவனது முகத்தைப் பார்த்து நிற்க, அவன் திரும்பி தன் மனையாளைப் பார்க்க அவளோ அப்படியே சாய்ந்து தூங்கியிருந்தாள்...
மெதுவாக எழும்பியவன் அவனது அம்மாவின் கையைப்பிடித்து இருத்தி
"என்னம்மா இது அவாதான் சின்னபிள்ளை. நான் தெரியாம செய்த செயலுக்கு இப்படி வதைக்குறா, அவளும் வேதனைப் பட்டுறா.நீங்க ஏம்மா இப்போ பிரச்சனைப் பண்றீங்க, இப்போ எதுக்கு ஊருக்குப் போகணும்னு சொல்லறீங்க.நீங்க எல்லாரும் விருப்பபட்டுத்தான அவளைக் கல்யாணம் பண்ணி வச்சீங்க"
சித்ரா "உன்னை இப்படி பார்க்க கஷ்டமாயிருக்கு, என்னை ஊருக்கு அனுப்பிவிடு"
"ம்மா,நீங்க அங்கத் தனியா இருக்கணும், அதுவுமில்லாமல், உங்களை அனுப்ப எனக்கு விருப்பமில்லம்மா, இங்கயே இருங்களேன்"என்றவனது முகமே சரியில்லை...
வேண்டாம்பா நீங்க இரண்டுபேரும் சமாதனமாகுங்க, நிலா பண்றதுக்கு இப்பவே அவமேல் எனக்கு கோபம் வருது, நான் எதாவது அவள திட்டி சண்டைப் போட்ருவேன், அந்தளவுக்கு இருக்கேன், நான் கொஞ்சநாள் இருந்திட்டு இங்க வந்திருவேன், உன்னை விட்டுட்டு நான் எங்கப்போக " என்றதும் அரைமனதாக சம்மதித்தான்.
இலக்கியாவும் அவருடன் செல்வதாக இருக்க, கார்ல நீங்க தனியாகப் போக வேண்டாம் ..பிளைட்ல டிக்கட் போட்டுத்தர்றேன்...இருங்க...என்று பேசி முடித்துவிட்டான்.
நிலா தூங்கி எழும்பும் போது அங்கு ஜோதி அவளது அருகில் இருந்தார்...சட்டென்று எழும்பியவளைப் பார்த்து சத்தமிட்டவர்
"இப்படியா எழும்புவ மெதுவா எழுந்தா என்ன"
அதையெல்லாம் கண்டுக்கொண்டாள் அது நிலாயில்லையே நீங்க எப்போம்மா வந்தீங்க என்றுக் கேட்டவள்..அவர் அருகில் வந்தமர்ந்தாள்...அவரின் பார்வை வித்தியாசத்தைப் பார்த்து "என்னம்மா ".
ஒன்னுமில்லை வா வந்து சாப்பிடு...என்றதும் மணி என்னம்மா என்று பார்க்க அது மாலை ஐந்து மணியைக் காட்டியது.
இவ்வளவு நேரமா தூங்கிட்டனா...என்றவள் எனக்கு கொஞ்சம் ஊட்டி விடுங்களேன் என்றதும் சாப்பாடு எடுத்து வந்து ஊட்டிவிட்டார்...சாப்பிட்டு முடிக்கவும் வெளிவராண்டாவில் சிறிது நடந்தவள் வீட்ல யாரையும் காணோம் எங்கப்போயிட்டாங்க என யோசித்து நடக்க சாப்பிட்ட சாப்பாடு வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது அவ்வளவுதான் தலயைச்சுற்றி வாந்தி எடுத்துக்கொண்டிருக்க அப்போதுதான் வெளியேயிருந்து கதிரும் சித்தார்த்தும் உள்ளேவந்தனர், கதிரோ மனைவியைப் பார்த்ததும் அருகில் வந்து மனைவியின் முதுகை வருடி விட்டான்...
ஐயோ நிலாவினால் சுத்தமாக முடியவில்லை ... அவன் மீதே சரிந்துவிட்டாள்...அப்படியே தூக்கிக்கொண்டு உள்ளே சென்றவன் சோபாவில் கிடத்தி அவளை சுத்தம் செய்தான்...ஜோதியும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அருகே போகவில்லை... இந்த சமயத்திலாதான் கணவன் மனைவியின் புரிதல் சரியாயிருக்கணும், அவர் மனைவிக்கு அவர் செய்யட்டும் என்று தள்ளியே நின்றுகொண்டார்...
அவளது அருகிலயே இருந்தவனது சிந்தனை எங்கயோ இருந்தது... மருமகனுக்கு டீ எடுத்துவந்துக் கொடுத்தார்...
“மன்னிச்சுருங்க அத்தை கோபத்துல நான் எடுத்த முடிவு இப்போ எல்லாரையும் வேதனைப்பட வைக்குது...”
“நீங்க இப்போ வருத்தப்படாதிங்க, பொருமையா இருங்க எல்லாம் சரியாகிரும்..” என்று மருமகனிடம் சொன்னவர்...சித்ரா அண்ணியும் இலக்கியாவும் எப்போ போனாங்க, அங்க எப்போ போய்சேருவாங்க...என்று ஜோதிக் கேட்டார்.
கதிர் "4 மணிக்கு பிளைட் கிளம்பிட்டு அங்க அம்மாவோட அண்ணன் பெரியமாமா வீட்டிலயிருந்து கூட்டிட்டுப்போயிடுவாங்க பிரச்சனை ஒன்னுமில்லை அம்மாவுக்கும் அதே ஊருதான..
நிலா கணவனைத்தான் பார்த்திருந்தாள், என்ன சொல்லுகின்றான் என்று...
அத்தையும் இலக்கியாவும் ஊருக்குப்போயிட்டாங்களா?என்னாலாயா?
நம்ம எல்லாரையும் படுத்தி வைக்கிறமோ?என விழித்தாள்.
கதிர் திரும்பி மனைவியைப் பார்த்து இப்போ பரவாயில்லையா...தலைசுத்துதா?எனக் கேட்க இல்லையென்று தலையசைத்தவள், எழும்பி ஜோதிக்கிட்ட வந்து அமர்ந்தாள்.
கதிர் "சித்தார்த் ஒரு இரண்டு மூன்று நாள் உங்க உதவித் தேவைப்படுது, என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகணும்"
சித்தார்த் "இதவேற நீங்க தனியா சொல்லனுமா நானே காலையில வந்திடுறேன், எனக்கு ஒருப் பிரச்சனையும் இல்லைத்தான்" என்று இருவரும் பேசிக்கொண்டிருக்க...
நிலாவிற்கு இது இரண்டவது அதிர்ச்சி என்னங்கடா நடக்குது இங்க "கீரியும் பாம்பும் கூட்டணிப் போட்டு நிக்குதுங்க" என்று கண்ணைவிரித்துப் பார்த்தாள்.
தலையை உதறி ‘இரண்டு நாளு தூங்கினது குத்தமாய்யா, அதுக்குள்ள என்னென்னமோ நடந்திருக்கு...’என நினைத்தாள்.
சமயலறையிலிருந்து "நிலா கொஞ்சம் இங்க வாயேன்" என்று ஜோதி அழைக்கவும் மெதுவாக அங்கேச் சென்றவளை ஜோதி ஒருவழியாக்கிவிட்டார்.
என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசுல நேத்து அவ்வளவு தூரம் சொல்லிட்டுத்தானப் போனேன். கவனமா நடந்துக்கோனு... உன் மாமியார் ரொம்ப வருத்தத்துல ஊருக்குப்போறாங்க...
மதியம் மருமகன்தான் சித்தார்த்திற்கு போன்லப் பேசி ஏர்ப்போர்ட் போகணும் வரமுடியுமானுக் கேட்டாங்களாம், அவன் கிளம்பும்போது நானும் அவன் கூடவே இங்க வந்துட்டேன்...
வந்தா இலக்கியவும் இருந்தா என்கிட்டப் பேசவேயில்லை...
உன் மாமியார்தான் "நீ அவங்க மகன்கிட்ட நடந்துக்குற முறை சரியில்லை, அவங்களை மதிக்கலையாம், அவங்களே மன்னிப்புக் கேட்டப்பிறகும் சண்டைப் போடுறியாம், நிறைய சொன்னாங்க, ரொம்ப வருத்தப்பட்டாங்க... "
நிலா காலையில் இலக்கியா பேசினதையும், அதற்குப்பின் நடந்ததையும் சொன்னவள் ,எல்லாரும் கதிர் பாவம் மன்னிப்புக்கேட்டுட்டார், வருத்தப்படுறார்னு சமாதானமாகிட்டீங்க, சரிதான்.
என்னை யாரு சமாதானப் படுத்தினா...
அத்தை என்கிட்ட மகனுக்காகப் பேசினாங்க, மாம்ஸ் அவர் பக்கம் நியாயத்தைப்பேசி மன்னிப்புகேட்டாங்க...
அவங்களால உண்டான என் மனக்காயத்திற்கு யாரு ஆறுதல் சொன்னா...
அது இன்னும் ரணமா வலிக்குதே! அதை நான் எப்படி மறக்க?
சொல்லுங்க...
அத்தனைப்பேரு கூடியிருக்கும்போது நாயைவிடக் கேவலமா என்னை கையைப்பிடித்து இழுத்து வெளியேத் தள்ளினாங்களே...அவங்களோடப் பாதியா...உயிரா நினைச்சிருந்தா இப்படி செய்யமுடிமா...
இவங்க வேண்டாம்னு சொன்னதுக்கு பிறகு வலியப்போய் தாலி வாங்கி வாழ்ந்ததினாலதான இப்படிலாம் செயாதாங்க...
அவள் சத்தமாகத்தான் பேசினாள் ஹாலில் இருந்த இருவருக்குமே நன்றாக கேட்டது.
கதிர் அமைதிகயாகக் கேட்டுக்கொண்டிருந்தான்...
ஜோதி அவளை அடக்கினார்...
இப்படியாக ஒருவாரம் சென்றது கதிர் கல்லூரிக்கு போகாமல் விடுப்பு எடுத்திருந்தான்...
ஜோதி தினமும் வந்து நிலாவினைக் கவனித்துக் கொண்டார்...
கதிரின் கையில் தையல் பிரித்து காயமெல்லாம் ஆறிவிட்டது.
ஜோதியிடம் வந்தவன் "நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றி அத்தை. நாளையிலிருந்து காலேஜ் போறோம், சமையல் வேலைக்கும் இப்போ ஆள் சொல்லிட்டேன். நாளையிலயிருந்து வந்திருவாங்க...”
" இதுல என்ன இருக்கு எங்க வீட்டுப் பிள்ளைக்கு வந்து செய்தேன் அவ்வளவுதான்.அவ சின்னப்பிள்ளை, கோபத்துல எதாவது செய்தாக் கொஞ்சம் பொறுத்துப்போங்க, பார்த்துக்கோங்க, எதுனாலும் எங்களை கூப்பிடுங்க” என்றார் ஜோதி..
கதிரும் சரியெனத் தலையசைத்தான்.
அன்றிரவு படுக்கையில் நிலா கதிரின் கைக்குள் இருந்தாள்...
அவனிடமிருந்து விலகமுற்பட, இன்னும் தனக்குள்ள அடக்கியவன்... அன்னைக்கு உன் மனக்காயத்திற்கு யாரும் மருந்துப்போடலைனுக் கவலைப்பட்டதான... இன்னைக்கு நான் மருந்துப்போடுறேன் என்று அவளது மெல்லிய இதழ்களை தனது
உதட்டினால் தீண்டினான்... அவள் திமிற திமிற இன்னும் தனக்குள் அடக்கினான்.